KKR vs PBKS IPL 2023: கொல்கத்தாவிடம் தாக்குப்பிடிக்குமா பஞ்சாப்.. நேருக்குநேரில் கேகேஆர் முன்னிலை..புள்ளிவிவரங்கள் இதோ!
கொல்கத்தா அணி தற்போது 10 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோது 53வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. கொல்கத்தா அணி தற்போது 10 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா மைதானம் எப்படி..?
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இதுவரை மொத்தம் 81 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 34 போட்டிகளிலும், சேஸிங் செய்த அணிகள் 46 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 235 ரன்கள் குவித்துள்ளது. அதேபோல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதே மைதானத்தில்தான் 49 ரன்களில் சுருண்டது.
நேருக்குநேர்:
ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளது. இதில், கொல்கத்தா அணி 20 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 11 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளனர். கடந்த ஐந்து போட்டிகளில் பஞ்சாப் அணி மூன்று முறையும், கொல்கத்தா அணி இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில், ஐபிஎல்-ல் இதுவரை கொல்கத்தா மற்றும் பஞ்சாப் இடையே மொத்தம் 10 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அந்த போட்டிகளில், கொல்கத்தா ஏழு முறையும், பஞ்சாப் மற்ற மூன்று போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. ரிவர்ஸ் போட்டியில், இந்த சீசனில் கொல்கத்தா அணியை பஞ்சாப் அணி தோற்கடித்தது.
KKR vs PBKS - ஆல்-டைம் டாப் பெர்ஃபார்மர்கள்:
பேட்டிங்கை பொறுத்தவரை கவுதம் கம்பீர் 492 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ராபின் உத்தப்பா 438 ரன்களும், விருத்திமான் சாஹா 394 ரன்களும் எடுத்துள்ளனர். பந்துவீச்சில் சுனில் நரைன் 32 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பியூஷ் சாவ்லா 24 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
ஸ்கோர் :
பஞ்சாப் அணிக்கு எதிராக, கொல்கத்தாவின் அதிகபட்ச ஸ்கோர் 245 ஆகவும், குறைந்த மதிப்பெண் 109 ஆகவும் உள்ளது.
கொல்கத்தாவுக்கு எதிராக, பஞ்சாப் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 214 ஆகவும், குறைந்த மதிப்பெண் 119 ஆகவும் உள்ளது.
இரு அணிகளின் முழுவிவரங்கள்:
கேகேஆர் அணி: நிதிஷ் ராணா (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ரின்குல் ராய், வைன்கஹவ் நரேன் , சுயாஷ் சர்மா, டேவிட் வெய்ஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, மன்தீப் சிங், லிட்டன் தாஸ், ஜேசன் ராய், மற்றும் ஆர்யா தேசாய்.
பிபிகேஎஸ் அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக் கான், மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் ஷர்மா, குர்னூர் சிங், ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், பால்தேஜ் சிங், ககிசோ ரபாதா, , ராகுல் சாஹர், சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, ஹர்பிரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, சிவம் சிங் மற்றும் மோஹித் ராத்தே.