CSK vs KKR, IPL 2023: கொல்கத்தாவை துவம்சம் செய்யுமா சென்னை..? இதுவரை ஐ.பி.எல். வரலாற்றில் நடந்தது என்ன?
ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே இதுவரை நடந்த போட்டிகளின் முடிவுகள் மற்றும் தனிநபர் சாதனைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே இதுவரை நடந்த போட்டிகளின் முடிவுகள் மற்றும் தனிநபர் சாதனைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
சென்னை - கொல்கத்தா அணிகள் மோதல்:
ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரலையில் கண்டு ரசிக்கலாம். முன்னதாக இரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் வரலாறு எப்படி உள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 17 முறையும், கொல்கத்தா அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவும் எதுவும் எட்டப்படவில்லை. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில், சென்னை அணி மூன்றிலும், கொல்கத்தா இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஈடன் கார்டன் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 9 போட்டிகளில், சென்னை அணி 5 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானங்களில் இதுவரை 80 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 33 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 47 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில், கொல்கத்தா அணி வெற்றியை பதிவு செய்தது.
ஸ்கோர் விவரங்கள்:
கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 220
சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 202
கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 55
சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 61
தனிநபர் சாதனைகள்:
கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த சென்னை வீரர்: சுரேஷ் ரெய்னா, 610 ரன்கள்
சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த கொல்கத்தா வீரர்: ஆண்ட்ரே ரஸல், 284 ரன்கள்
கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த சென்னை அணி வீரர்: ஜடேஜா, 16 விக்கெட்கள்
சென்னை அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த கொல்கத்தா அணி வீரர்: நரைன், 20 விக்கெட்கள்
கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணி வீரரின் அதிகபட்ச ஸ்கோர்: டூப்ளெசிஸ், 95 ரன்கள்
சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி வீரரின் அதிகபட்ச ஸ்கோர்: பிஸ்லா, 92 ரன்கள்