Watch Video: மழை நேரத்தில்.. மைதான ஊழியர்களுக்கு உதவிய லக்னோ பீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ்! -
Watch Video: மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டதால் மைதான ஊழியர்களுக்கு உதவிய லக்னோ பீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ்!
ஐ.பி.எல். தொடரில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மழை பெய்தபோது, லக்னோ அணியின் ஃபீல்டிங் கோச், முன்னாள் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் ஊழியர்களுக்கு உதவிய வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
சென்னை - லக்னோ மோதல்:
ஐபிஎல் 16வது சீசனின் 46வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் லக்னோ அணி இன்று களமிறங்கியது. அதேநேரம் காயம் காரணமாக கே.எல். ராகுல் இந்த போட்டியில் விளையாடாததால், க்ருணால் பாண்ட்யா தலைமையில் லக்னோ களமிறங்கியது.
சரிந்த விக்கெட்டுகள்:
தொடக்க ஆட்டக்கரரான கைல் மேயர்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து வந்த கேப்டன் க்ருணால் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான வோரா 10 ரன்களில் நடையை கட்டினார். தொடர்ந்து, ஸ்டோய்னிஷ் 6 ரன்களிலும், கரண் சர்மா 9 ரன்களிலும் பெவிலியன் திரும்பினார். லக்னோ அணியின் முதல் 5 விக்கெட்டுகளும் சென்னையின் சுழற்பந்துவீச்சில் இருந்து தான் கிடைத்தது. இந்த சரிவில் இருந்து இறுதி வரையில் லக்னோ அணியால் மீளவே முடியவில்லை.
சென்னை அணிக்கு இலக்கு:
போட்டியில் 19.2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால், போட்டி நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்ததால் போட்டி கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பிரித்து வழங்கப்பட்டது. இதன் மூலம் தலா 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் லக்னொ அணி 2-வது இடத்திற்கும் சென்னை அணி 3-வது இடத்திற்கும் முன்னேறி உள்ளது.
.@JontyRhodes8 to the rescue 😃👌🏻
— IndianPremierLeague (@IPL) May 3, 2023
No shortage of assistance for the ground staff in Lucknow 😉#TATAIPL | #LSGvCSK pic.twitter.com/CGfT3dA94M
உதவியாளருடன் ஜான்டி ரோட்ஸ்:
ஜான்டி ரோட்ஸ் முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் சிறப்பாக ஃபீல்டிங்க் செய்ய கூடியவர். ஐ,.பி.எல். போட்டியில் லக்னோ அணிக்கான பயிற்சியாளராக உள்ளார். ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டபோது, மைதானத்தில் நீர் தேங்காமல், மழை துளி விழாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுப்பட்டனர். அவர்கள் தார்படுதா கொண்டு மூடினர். அப்போது ஊழியர்களுக்கு ஜான்டி ரோட்ஸ் உதவிய வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.