மேலும் அறிய

IPL Throwback: ஆர்.சி.பி.க்கு எதிராக பெங்களூரில் தோனி செய்த மெகா சம்பவம்! மறக்க முடியுமா?

2018ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணிக்கு எதிராக சென்னை அணியின் கேப்டன் தோனி ஆடிய பேட்டிங் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத ஒரு இன்னிங்ஸ் ஆகும்.

நடப்பு ஐ.பி.எல். தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. சி.எஸ்.கே. அணியில் தோனியும், ஆர்.சி.பி. அணியின் விராட் கோலியும் இருப்பதால் மகிராட் ஆகிய இவர்கள் ஆட்டத்தையும் பார்ப்பதற்காக மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி வழிவார்கள். இந்த நிலையில், இரு அணிகளும் இதுவரை மோதிய ஆட்டங்களில் மறக்க முடியாத போட்டி ஒன்றை கீழே விரிவாக காணலாம்.

சிக்ஸர் மழை பொழிந்த டிவிலியர்ஸ்:

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணிக்காக கேப்டன் விராட் கோலியும், குயின்டின் டி காக்கும் களமிறங்கினர். கோலி நிதானமாக ஆட, டி காக் அதிரடியாக ஆடினார். விராட் கோலி 15 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த டி காக் – டிவிலியர்ஸ் ஜோடி வான வேடிக்கை நிகழ்த்தினர். குறிப்பாக, டி விலியர்ஸ் சிக்ஸர் மழை பொழிந்தார். மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு தந்த டி காக்கும் சிக்ஸர் மழை பொழிந்தார்.

சிறப்பாக ஆடிய டி காக் 37 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசிய நிலையில் 53 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அப்போது, அணியின் ஸ்கோர் 13.1 ஓவர்களில் 138 ரன்கள் ஆகும். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அதிரடி காட்டிக் கொண்டிருந்த டிவிலியர்ஸ் அரைசதம் அடித்தார். அரைசதம் விளாசிய சிறிது நேரத்தில் டி விலியர்ஸ் அவுட்டானார். சக நாட்டு வீரரான இம்ரான் தாஹிர் பந்தில் அவர் கேட்ச் ஆனார் டி விலியர்ஸ் 30 பந்துகளில் 2 பவுண்டரி 8 சிக்ஸருடன் 68 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

தத்தளித்த சென்னை:

கோரி ஆண்டர்சன் 2 ரன்களில் அவுட்டாக, மன்தீப் சிங் அதிரடி காட்டத் தொடங்கினார். அவரது அதிரடியால் மீண்டும் ஆர்.சி.பி. ஸ்கோர் எகிறத் தொடங்கியது. சிறப்பாக ஆடிய மன்தீப் 17 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் 4 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 13 ரன்கள் எடுத்ததால் ஆர்.சி.பி. அணி 205 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 206 ரன்கள் என்ற கடின இலக்கு சென்னை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்சனும் கடின இலக்கை நோக்கி களமிறங்கினர். தொடக்க வீரர் வாட்சன் 7 ரன்களுக்கு அவுட்டானார். அம்பத்தி ராயுடு அதிரடியாக ஆடினார். சுரேஷ் ரெய்னா 11 ரன்களுக்கு அவுட்டானார். சாம் பில்லிங்ஸ் 9 ரன்களுக்கு அவுட்டாக, சாஹல் சுழலில் ஜடேஜா 3 ரன்களுக்கு போல்டானார். 9 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது.

மிரட்டிய தோனி - ராயுடு ஜோடி:

அப்போதுதான், சென்னை அணியின் கேப்டன் தல தோனி களமிறங்கினார். எந்த சூழலிலும் ஆட்டத்தை மாற்றும் வல்லமை கொண்ட தோனி, அந்த போட்டியிலும் அப்படியொரு அசாதாரண சம்பவத்தை செய்தார். வெற்றி வாய்ப்பை தங்கள் வசம் வைத்திருந்த பெங்களூர் அணியிடம் இருந்து தோனி முழு வெற்றி வாய்ப்பையும் தட்டிப்பறித்தார்.

மறுமுனையில் அம்பத்தி ராயுடு அதிரடி காட்ட அவருடன் இணைந்து தோனி சிக்ஸர் மழையை பொழியத் தொடங்கினார். பெங்களூர் அணிக்காக டிவிலியர்ஸ் காட்டிய அதிரடியை போல தோனி இந்த பக்கம் காட்டினார். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி ரன்களை மின்னல் வேகத்தில் சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க விராட் கோலி பந்துவீச்சாளர்களை மாற்றியும் எந்த பலனும் அளிக்கவில்லை.

ருத்ரதாண்டவம் ஆடிய தோனி:

குறிப்பாக, கோரி ஆண்டர்சன் பவுலிங்கை இருவரும் பிரித்து மேய்ந்தனர் என்றே சொல்ல வேண்டும். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த அம்பத்தி ராயுடு 53 பந்துகளில் 3 பவுண்டரி 8 சிக்ஸருடன் 82 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அப்போது, 17.5 ஓவர்களில் சென்னை 175 ரன்கள் எடுத்திருந்தது. பின்னால் வந்த பிராவோவை வைத்துக் கொண்டு தோனி ஆட்டத்தை முழு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார்.

13 பந்துகளில் 32 ரன்கள் தேவை என்ற சூழலில், பிராவோவும் ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் விளாச தோனி கடைசி ஓவரில் 4வது பந்தில் சிக்ஸர் அடித்து 2 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டினர். போட்டி முடிவில் தோனி 34 பந்துகளில் 1 பவுண்டரி 7 சிக்ஸருடன் 70 ரன்களுடனும், பிராவோ 7 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடனும் களத்தில் நின்றனர்.

தோனி களத்தில் இருந்தால் எந்தவொரு சூழலிலும் எதிரணியிடம் இருந்து வெற்றியை பறித்து தன்வசப்படுத்துவார் என்பதற்கு இந்த போட்டியும் மிகச்சிறந்த உதாரணம் ஆகும். இந்த போட்டியில் பெங்களூர் வீரர் கோரி ஆண்டர்சன் வீசிய 3.4 ஓவர்களில் மட்டும் 58 ரன்களை சென்னை அணி எடுத்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget