IPL SRH vs DC: டெல்லிக்கு எதிராக ஆதிக்கத்தை தொடருமா ஹைதரபாத்..? இதுவரை ஐ.பி.எல். வரலாற்றில் நடந்தது என்ன?
IPL SRH vs DC: ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஹைதரபாத் அணி ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.
ஐ.பி.எல். தொடரின் 34வது போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதரபாத் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் நேருக்கு நேர் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை ஐ.பி.எல். போட்டிகளில் ஆடிய போட்டிகளில் ஹைதரபாத் அணியே ஆதிக்கம் செலுத்தியது.
இந்த தொடரில் இரு அணிகளுமே இதுவரை மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வரும் சூழலில், இனி வரும் ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இனி வரும் ஆட்டங்களில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
- ஐ.பி.எல். வரலாற்றில் சன்ரைசர்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இதுவரை 21 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
- சன்ரைசர்ஸ் 11 போட்டிகளிலும், 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி டையில் முடிந்துள்ளது.
- ஹைதரபாத் மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை ஆடியுள்ள 8 போட்டிளில் சன்ரைசர்ஸ் 5 ஆட்டங்களிலும், டெல்லி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
- சன்ரைசர்ஸ் போட்டிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லியின் அதிகபட்ச ஸ்கோராக 207 ரன்களை பதிவு செய்துள்ளது. அந்த போட்டியில் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் 219 ரன்களை எடுத்துள்ளது. அந்த போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதரபாத் வெற்றி பெற்றது.
- டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 80 ரன்கள் ஆகும்.
- சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் டெல்லி அணி குறைந்த பட்சமாக 116 ஆகும்,
- டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்சிற்காக தனிநபர் அதிகபட்சமாக 92 ரன்களை தவான் எடுத்துள்ளார்.
- சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனிநபர் அதிகபட்சமாக டெல்லி கேப்டன் ரிஷப்பண்ட் 128 ரன்களை விளாசியுள்ளார்.
- டெல்லி அணிக்கு எதிரான சன்ரைசர்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக ரஷீத்கான் உள்ளார். 12 போட்டிகளில் அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- டெல்லி அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக ரபாடா உள்ளார். அவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக தவான் அதிகபட்சமாக 575 ரன்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சன்ரைசர்ஸ் அணிக்காக டேவிட் வார்னர் 558 ரன்களுடன் உள்ளார்.
இன்றைய போட்டியில் வெற்றிக்காக இரு அணி வீரர்களுமே போராடுவார்கள் என்பதால் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க: IPL SRH vs DC: வெற்றியை தொடருமா டெல்லி..? தோல்வியில் இருந்து மீளுமா சன்ரைசர்ஸ்..? இன்று மோதல்..!
மேலும் படிக்க: IPL Points Table: கெத்தா முதலிடத்திற்கு சென்ற சென்னை...! அப்போ மற்ற அணிகள் புள்ளிப்பட்டியலில் எந்த இடம்?