Bat Size Checks in IPL: கறார் காட்டும் அம்பயர்ஸ்! பேட் இப்படி தான் இருக்கணும்.. விதி சொல்வது என்ன?
நேற்று டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் ராயஸ் வீரர் ரியன் பராக் பேட்டை நடுவர்கள் நீண்ட நேரம் சோதித்து சரியான அளவில் உள்ளதா என்பதை அறிந்த பிறகே பேட்டிங் செய்ய அனுமதித்தனர்.

நடப்பு ஐபிஎல்லில் தொடரில் பேட்ஸ்மென்களின் பேட்டின் அளவு சரிபார்ப்புகள் கிரிக்கெட் ரசிகர்களிடையே புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளன. களத்தில் உள்ள நடுவர்கள் புதிதாக களத்தில் அமர்ந்திருக்கும் வீரர்களின் பேட்களை பரிசோதித்த பிறகு தான். புதிய சீர்திருத்தம் பிசிசிஐ வழங்கிய பரிந்துரையைப் பின்பற்றுகிறது.
பேட் அளவு சரிப்பார்ப்பு:
நேற்று டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் ராயஸ் வீரர் ரியன் பராக் பேட்டை நடுவர்கள் நீண்ட நேரம் சோதித்து சரியான அளவில் உள்ளதா என்பதை அறிந்த பிறகே பேட்டிங் செய்ய அனுமதித்தனர். இதே போல நேற்று முன் தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, இரண்டு வீரர்களின் பேட் 'அளவீட்டு சோதனை. தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் பேட்களை மாற்ற வேண்டியிருந்தது . கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரைன் மற்றும் 11-வது இடத்தில் களமிறங்கிய ஆன்டிக் நோர்கியா ஆகியோரின் பேட் 'அளவீட்டு சோதனையில்' தோல்வியடைந்தது. இது தொடர்பான காட்சிகள் மற்றும் காணொளி சமூக ஊடகங்களில் பரவின.
BCCI now does bat checks on the field instead of in the dressing room. So if you're wondering why umpires are checking bats or noticed Anrich Nortje changing his bat today, it means his bat did not meet the size rules.#IPL2025 #BCCI @IPL @BCCI pic.twitter.com/k3PVWRWO39
— Sai (@sai_whispers) April 15, 2025
இதே போல மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு இதே போல சோதனை நடத்தப்பட்டு அவரது பேட்டும் மாற்றப்பட்டது.
விதி சொல்வது என்ன?
பேட்டிங்கின் அளவுக்கு குறிப்பிட்ட வரம்பை மீறாமல் இருக்க வேண்டும். வீரர்கள் வெவ்வேறு அளவிலான மட்டைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். மட்டையின் பிளேடு பகுதியின் அகலம் 4.25 அங்குலத்திற்கும், ஆழம் 2.64 அங்குலத்திற்கும், விளிம்பு 1.56 அங்குலத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும் என்பது விதி.
BCCI now does bat checks on the field instead of in the dressing room. So if you're wondering why umpires are checking bats or noticed Anrich Nortje changing his bat today, it means his bat did not meet the size rules.#IPL2025 #BCCI @IPL @BCCI pic.twitter.com/k3PVWRWO39
— Sai (@sai_whispers) April 15, 2025
அகலமான மற்றும் கனமான மட்டைகளைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்கள் எடுக்க முடியும் மேலும் இந்த விதி அதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது,. கிரிக்கெட் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கான விளையாட்டாக மாறிவிட்டது என்ற விமர்சனத்தை போக்கும் வகையில் இந்த புதிய சீர்திருத்தம் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.