IPL Mega Auction 2022: போட்டி போட்டு மீண்டும் தீபக் சஹரை வாங்கிய சென்னை அணி.. எவ்வளவு கோடி தெரியுமா?
IPL Mega Auction 2022 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த தீபக் சஹர், 14 கோடி ரூபாய்க்கு மீண்டும் அதே அணியால் எடுக்கப்பட்டுள்ளார்.
![IPL Mega Auction 2022: போட்டி போட்டு மீண்டும் தீபக் சஹரை வாங்கிய சென்னை அணி.. எவ்வளவு கோடி தெரியுமா? IPL Mega Auction 2022: chennai super kings buys deepak chahar for whooping 14 crore rupees IPL Mega Auction 2022: போட்டி போட்டு மீண்டும் தீபக் சஹரை வாங்கிய சென்னை அணி.. எவ்வளவு கோடி தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/12/b99f726ac6b0d230e0fabeb187d853f1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐபிஎல் (IPL 2022) தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஏலத்திற்கான அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் தொகையைத் தொடக்க விலையாக 48 வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், 1.5 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 20 வீரர்களும், 1 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 34 வீரர்களும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த தீபக் சஹர், 14 கோடி ரூபாய்க்கு மீண்டும் அதே அணியால் எடுக்கப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பவுலராக களமிறங்குபவர் தீபக் சாஹர். சென்னை அணியின் வெற்றிகளில் இவரது பங்கு அதிகம். வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்ய திட்டமிடும் சென்னை அணி, தீபக் சாஹரை எடுக்கும் எடுத்திருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்
ஜடேஜா - 16 கோடி, தோனி - 12 கோடி, மொயின் அலி - 8 கோடி, ருதுராஜ் - 6 கோடி
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை தக்க வைத்தது. ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பின் போது சென்னை அணியில் ஜடேஜா 16 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கபட்டார். கேப்டன் மகேந்திர சிங் தோனி 12 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த முறை ஐபிஎல் தொடரில் தோனி மெண்டராக விளையாடி ஜடேஜா கேப்டனாக இருப்பார் என்று சிலர் தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில் சென்னை அணிக்கு தோனியே கேப்டனாக இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் சிஎஸ்கே அணிக்கு ஜடேஜாவை தற்போது கேப்டனாக்கும் எண்ணம் எதுவுமில்லை என்பதும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)