IPL Drone Show Video: ஐபிஎல் தொடக்க விழா… பார்வையாளர்களை பிரமிக்க வைத்த ட்ரோன் அணிவகுப்பு.. வாவ் வீடியோ
பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில், அகமதாபாத் நகரத்தின் இரவு வானத்தை ஒளிரச் செய்த திகைப்பூட்டும் ட்ரோன் நிகழ்ச்சி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது பதிப்பு வெள்ளிக்கிழமை, மார்ச் 31 அன்று துவங்கிய நிலையில், அதற்கு முன்னதாக, பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட தொடக்க விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பிரபல நடிகர்களான ரஷ்மிகா மந்தனா, தமன்னா பாட்டியா மற்றும் பிரபல பின்னணி பாடகர் அரிஜித் சிங் ஆகியோர் கலந்து கொண்டாலும், பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில், அகமதாபாத் நகரத்தின் இரவு வானத்தை ஒளிரச் செய்த திகைப்பூட்டும் ட்ரோன் நிகழ்ச்சி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
The drone show during the mid-innings was breathtaking. pic.twitter.com/DmLRBJ76jv
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 1, 2023
ட்ரோன் அணிவகுப்பு
ஐபிஎல் தொடக்க விழாக்களின் 16 ஆண்டுகால பாரம்பரியத்திற்கு, முதன்முதலில் கூடுதலாக ஒரு கம்பீரமான ஒளி காட்சியை வழங்குவதற்காக எல்இடி மற்றும் பிற தொழில்நுட்ப ஆதரவு கருவிகள் பொருத்தப்பட்ட சுமார் 1500 ட்ரோன்கள் அகமதாபாத்தில் வானத்தை நோக்கி பரக்கவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருள் வானத்தில் ட்ரோன்கள் பல படங்களை 3டி யில் வரைந்து காண்போரை ப்ரம்மிக்க செய்தது. இதற்காக கடந்த இரண்டு நாட்களாக 3டி ட்ரோன் நிகழ்ச்சிக்கான பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
மொத்தமாக ப்ரோக்ராம் செய்யப்பட்டது
ட்ரோன்களால் உருவாக்கப்பட்ட வடிவங்களின் வரிசையில், 16வது ஐபிஎல்லில் அணிகள் போராடும் விரும்பத்தக்க ஐபிஎல் கோப்பையின் டிசைன் பிரதியும் இருந்தது. பற்பல ட்ரோன்களை ஒரே சிஸ்டத்தில் இணைத்து மொத்தமாக ப்ரோக்ராம் செய்யப்பட்டு இது போன்ற வடிவங்களை உருவாக்கி வெற்றிகரமாக ஒளிர செய்ய முடிந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் பந்துவீச்சாளர் ஒருவர் பந்து வீசுவது போன்ற அமைப்பு, பேட்ஸ்மேன் அதனை அடிப்பது போலவும், ஐபிஎப் லோகோவும், ஐபிஎல் கோப்பையும் தோன்றியது குறிப்பிடத்தக்கது.
What a lovely sight - light and drone show at Narendra Modi Stadium. pic.twitter.com/2w245gXbNW
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 31, 2023
சிஎஸ்கே பேட்டிங்
குஜராத் கேப்டன் ஹர்திக் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்த பிறகு தோனியின் சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கியது. பவர்பிளேயில், தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வேயை சீக்கிரமாக ஆட்டமிழந்ததால், சென்னைக்கு தொடக்கத்திலேயே பெரும் அடி கிடைத்தது. இருப்பினும், ருதுராஜ் கெய்க்வாட் ஒரு முனையில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வந்தார். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்ததால் அணி 178 ரன்களை மட்டுமே குவித்தது. குஜராத் அணியின் கில்லின் அதிரடியால் அந்த ரன்னையும் கொஞ்சம் சுலபமாகவே எட்டி முதல் வெற்றியை பதிவு செய்தனர் நடப்பு சாம்பியன் குஜராத் அணியினர்.