IPL Auction 2025 : CSK-வின் RRR..மீண்டும் கோட்டைக்குள் வந்த அஷ்வின்.. இனிமேல் தான் சம்பவமே
IPL Auction 2025: சென்னை அணியில் ரவி அஷ்வின் இணைந்ததன் மூலம் சேப்பாக்கில் மீண்டும் விளையாடவுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு விளையாடவுள்ளார் ரவி அஷ்வின்.
ஐபிஎல் மெகா ஏலம்:
ஐபிஎல் மெகா ஏலம் ஜெட்டாவில் நடைப்பெற்று வருகிறது. இந்த ஏலத்தில் மார்க்கி வீரர்கள் பட்டியலில் வந்த ரிஷப் பண்ட் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு 27 கோடிக்கு ஏலம் போனார். அதேப்போல பஞ்சாப் அணி ஸ்ரேயஸ் ஐயரை 26.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்க்கி வீரர்கள் பட்டியலில் சென்னை யாரையும் எடுக்கவில்லை. கே.எல் ராகுல், அர்ஷ்தீப் சிங், முகம்து சமியை ஏலத்தில் எடுக்க போனாலும் யாரையும் எடுக்கவில்லை.
சரவெடி காட்டிய சிஎஸ்கே:
இரண்டாம் கட்ட ஏலம் தொடங்கியவுடன் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து வீரர்களை வாங்கி குவித்தது. முதலில் டெவோன் கான்வேயை 06.25 கோடிக்கு முதலில் எடுத்தது. அதன் பிறகு ராகுல் த்ரிப்பாட்டியை 3.4 கோடிக்கும், அடுத்ததாக ரச்சின் ரவீந்திராவை 4 கோடிக்கு ஏலம் எடுத்தது. அடுத்ததாக ரவிச்சந்திரன் அஸ்வினை ராஜஸ்தான் அணியும் போட்டி போட்டுக்கொண்டு இருந்தது, ஆனால் சென்னை அணி விடாப்பிடியாக போட்டிப்போட்டு இறுதியில், சென்னை ரவிச்சந்திரன் அஸ்வினை 9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ரவி அஷ்வின் விளையாட உள்ளார். அடுத்தப்படியாக சென்னை அணி கலீல் அகமதை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
நூர் அகமதுக்கு ஜாக்பாட்:
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஆப்கானிஸ்தான் இளம் சுழற்பந்து வீச்சாளர் நூர் அஹ்மத், ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 கோடிக்கு கைப்பற்றியதால், இந்த ஏலத்தில் சிஎஸ்கேயின் விலை உயர்ந்த வீரராக உருவெடுத்தார்.மேலும் அடுத்தப்படியாக தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
சென்னை அணியின் பதிவு:
ரவி அஷ்வினை ஏலம் எடுத்தன் மூலம் ரவி இந்திரன் மற்றும் ரவி சந்திரன் இணைந்துள்ளதாக சென்னை அணி பதிவிட்டுள்ளது.
This Duo. In Chepauk. The absolute feels! 💛✨#SuperAuction #UngalAnbuden pic.twitter.com/82qOLILzz5
— Chennai Super Kings (@ChennaiIPL) November 24, 2024
அடுத்ததாக சென்னையின் அணியின் RRR என்கிற பதிவையும் சென்னை அணி வெளியிட்டது. அதில் ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா, ரவி அஷ்வினை குறிப்பிட்டு அவ்வாறு பதிவிட்டுள்ளனர்.
Multiverse of Ravis!
— Chennai Super Kings (@ChennaiIPL) November 24, 2024
RAVIchandran Ashwin! 💥
RAVIndra Jadeja!✨
RAVIndra, Rachin! 🥳#WhistlePodu #SuperAuction pic.twitter.com/Mdd5cc8MEP