IPL Auction 2022 : சச்சின் வழியில் இனி அர்ஜுன்.. நெட் பௌலர் டு டெத் பௌலர்... மும்பை அணிக்கு அடித்த ஆஃபர்..!
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை 30 லட்சத்திற்கு மும்பை அணி ஏலம் எடுத்தது.
![IPL Auction 2022 : சச்சின் வழியில் இனி அர்ஜுன்.. நெட் பௌலர் டு டெத் பௌலர்... மும்பை அணிக்கு அடித்த ஆஃபர்..! IPL auction 2022: Sachin Tendulkar's son Arjun Tendulkar bought by Mumbai Indians for Rs 30 lakhs IPL Auction 2022 : சச்சின் வழியில் இனி அர்ஜுன்.. நெட் பௌலர் டு டெத் பௌலர்... மும்பை அணிக்கு அடித்த ஆஃபர்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/13/924c27c7827c727aa3b80d62ea89b1cf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐபிஎல் மெகா வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று முதல்நாள் ஏலம் நடைபெற்றது. அதில் 161 வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கும், தீபக் சாஹர் 14 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அவர் தவிர மற்ற சில வீரர்களும் அதிக விலைக்கு எடுக்கப்பட்டனர்.
இரண்டாவது நாள் ஏலம் இன்று தொடங்கியது முதலே பரப்பரப்பு தொடங்கியது. இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை 30 லட்சத்திற்கு மும்பை அணி ஏலம் எடுத்தது.
Arjun is ready to don the Blue and Gold threads again! 🕺🏽
— Mumbai Indians (@mipaltan) February 13, 2022
A hearty welcome to you, Arjun Tendulkar 💙#OneFamily #MumbaiIndians #AalaRe #IPLAuction pic.twitter.com/nKLYbGd8RF
அர்ஜுன் டெண்டுல்கர் தனது தந்தை சச்சின் டெண்டுல்கரின் வழிகாட்டுதலின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட இருக்கிறார். துரிதப்படுத்தப்பட்ட ஏலத்திற்கு பட்டியலிடப்பட்ட வீரர்களுக்கான ஏலத்தில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கரை மீண்டும் மும்பை அணி ஏலத்தில் எடுத்தது.
கடந்த ஐபிஎல் 2021 சீசனில் மும்பை அணிக்கு நெட் பௌலராக ஐக்கிய அரபுஎமிரேட்ஸுக்கு பறந்தார். இந்த தொடரில் அவருக்கு மேலும் ஒரு படியாக மும்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், கடந்த ஐபிஎல் முதல் பாதியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கர் தனது தந்தையுடன் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்பொழுது சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
अर्जुन परत आला 💙#OneFamily #MumbaiIndians #AalaRe #TATAIPLAuction #IPLAuction https://t.co/mHadfH6BIR pic.twitter.com/jkHPPMPhmC
— Mumbai Indians (@mipaltan) February 13, 2022
இரண்டாவது பாதியின்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பயணம் செய்த அர்ஜுன் காயம் காரணமாக பயிற்சியில் ஈடுபடவில்லை. ஐபிஎல் தொடரில் பங்கேற்காத அர்ஜுன், மும்பை ஸ்டேட் அணிக்காக 2 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த சீசனில் அவர் அறிமுகமாகலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2வது நாளில் மும்பை அணி ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு 8 கோடி ரூபாய்க்கும், தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்டர் டெவால்ட் ப்ரீவிசையும் ரூ.3 கோடிக்கு வாங்கியது. அதேபோல்,பசில் தம்பியை ரூ. 30 லட்சத்திற்கும், தமிழக வீரர் முருகன் அஸ்வினை ரூ. 1.6 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)