IPL 2025 RCB vs RR: ஆர்சிபிக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ராஜஸ்தான்? பவுலிங்கில் கலக்குமா பெங்களூர்?
IPL 2025 RCB vs RR: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூர் மைதானத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
3 வெற்றி பெற்ற ஆர்சிபி அணிக்கும், 2 வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணிக்கும் நடக்கும் இந்த போட்டியில் அடுத்த வெற்றியைப் பெற இரு அணிகளும் துடிக்கும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
ப்ளேயிங் லெவன்:
ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜோரல், ஹெட்மயர், ஹசரங்கா, ஆர்ச்சர், தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
ஆர்சிபி அணியில் பில் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, யஷ் தயாள் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
பேட்டிங் எப்படி?
இரு அணிகளிலும் பேட்டிங் வலுவாக உள்ளது. ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் ஜெய்ஸ்வால், சாம்சன், ராணா, ரியான் பராக், அபிஷேக் ஜுரேல், ஹெட்மயர், ஆகியோர் உள்ளனர். அதேபோல ஆர்சிபி அணியிலும் பில் சால்ட், விராட் கோலி, படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட் உள்ளனர்.
இரு அணியிலும் வலுவான பேட்டிங் உள்ள நிலையில், இந்த மைதானத்தில் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இரு அணிகளிலும் தடுமாற்றத்தில் உள்ள நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இன்று சிறப்பாக ஆடினால் அது அந்த அணிக்கு வலுவாக இருக்கும்.
பவுலிங்கில் எப்படி?
ஆர்சிபி அணியைப் பொறுத்தவரையில் புவனேஷ்னவர், யஷ் தயாள், ஹேசில்வுட் உள்ளனர். சுழலில் குருணல் பாண்ட்யா, சுயாஷ் சர்மா ஆகியோர் உள்ளனர். ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, தீக்ஷனா உள்ளனர். இரு அணியிலும் வேகம், சுழல் கலந்த கலவையாக உள்ளனர். இதனால், இவர்கள் எப்படி பந்துவீசுகிறார்கள் என்பதை பொறுத்தே அந்தந்த அணியின் வெற்றி வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.




















