PBKS vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் தோல்வி! சோகத்தில் ரசிகர்கள்!
IPL 2025 PBKS vs CSK: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 22-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சென்னை - பஞ்சாப் போட்டி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் மார்ச், 22-ம் தேதி தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா என்றால் அது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதங்களை சொல்லிவிடலாம். 10 அணிகள், 74 போட்டிகள் என சுவாரஸ்யமான தருணங்களுடன் காத்திருக்கிறது தொடர். சென்னை இதுவரை நடந்துள்ள 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றதுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
22-வது லீக் போட்டி, பஞ்சாப் சண்டிகர் பகுதியில் உள்ள Maharaja Yadavindra Singh International கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணியை ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பிரியான்ஷ் ஆர்யா, பிரம்சிம்ரன் சிங் இருவரும் அதிரடியாக தொடங்கினர். பிரம்சிம்ரன் சிங் ரன் ஏதும் இன்றி அவுட் ஆனார்.ஸ்ரேயஸ் அயர் 9 ரன்னிலும் மார்கஸ் ஸ்டோய்னிக்ஸ் 4 ரன்னிலும் அவுட் ஆகினர். வதேராவும் 9 ரன்னில், மேக்ஸ்வெல் 1 ஆட்டம் இழத்தனர். பஞ்சாப் அணி 83 ரன்னுக்கு 56 விக்கெட்டுகளை இழந்தது.
பிரியான்ஷ் ஆர்யா அதிரடி சதம்
பிரியான்ஷ் ஆர்யா 103 ரன்கள், ஷஹாங் சிங் 52 ரன், மார்கோ ஜேசன் 34 ரன் எடுத்தனர்.ஷஷாங்க் சிங், மார்கோ யான்சன், இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணியில் பிரியான்ஷ் ஆர்வ்யா 42 ரன்னில் 103 ரன் எடுத்து அவுட் ஆனார். 9 சிக்ஸர்கள், 7 பவுண்ட்ரிகள் அடித்தார். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன், 2010ம் ஆண்டில் யூசுஃப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
— Chennai Super Kings (@ChennaiIPL) April 8, 2025
சென்னை அணியில் கலீல் அகமது, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும் முகேஷ் செளத்ரி, நூர் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.அஸ்வின் 4 ஓவர்களில் 2 விகெட்டுகள் எடுத்தார்.. பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
சென்னை அணி மீண்டும் தோல்வி
220 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கியது. ரச்சின் ரவீந்திரா, கான்வே இருவரும் நன்றாக விளையாடினர். 5 ஓவருக்கு அணி 50 ரன் எடுத்திருந்தது. அப்போது மேக்ஸ்வெல் பவுலிங்கில் ரச்சின் 36 ரன்களுக்கு அவுட் ஆனார். மூன்றாவது விக்கெட்டுக்கு ஆட வந்த ருத்ராஜ் கெய்க்வாட் 1 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சிவம் துபே - கான்வே கூட்டணி அடித்து ஆடி அணியை வெற்றிப் பாதையில் பயணிக்க வைத்தது. கான்வே அரைசதம் அடித்தார்.
கான்வே அடித்த கேட்ச் ஷாட்டுகளை மூன்று முறை ட்ராப் செய்தனர் பஞ்சாப் அணி வீரர்கள். சிவம் துபே 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஃபெர்குசன் பந்தில் அவுட் ஆனார். அடுத்ததாக தோனி களமிறங்கினார். கான்வே - தோனி அதிரடியாக விளையாடி சென்னை அணி வெற்றி என்று எதிர்பார்த்த ரசிகர்களின் கனவு நிறைவேறவில்லை.
கான்வே அதிரடி அரைசதம்
டெவான் கான்வே, தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடி 17.5 ஓவரில் 49 பந்துகளில் 69 ரன் எடுத்து 'retired out' கொடுத்து சென்றார். 6 பவுண்ட்ரிகள், 2 சிக்ஸர் அடித்தார்.
தோனி 3 சிக்ஸர்ஸ்
கான்வே பெவிலியன் சென்றபிறகு ஜடேஜா களமிறங்கினார். தோனி - ஜடேஜா இருவரும் பவுண்ட்ரி அடிக்க முயற்சி செய்தனர். எம்.எஸ். தோனி மூன்று சிக்ஸர்கள், 1 பவுண்ட்ரி உடன் 12 பந்துகளுக்கு 27 ரன் எடுத்து கேட்ச் அவுட் ஆனார்.
சென்னை அணியில் அதிரடியாக ரன் Chase செய்யாமல் போனது 220 என்ற இலக்கை எட்ட முடியவில்லை. ஒரு ஓவரில் 28 ரன் தேவைப்பட்டது. ஜடேஜாவும் விஜய் ஷங்கரும் களத்தில் இருந்தனர். ஆனால், 20 ஓவர்களில் அடித்து ஆடிய வேண்டிய நேரத்தில் ரன் ஏதும் எடுக்காமல் இருந்தது சென்னை அணி 220- என்ற இலக்கை எட்ட முடியாமல் போனது. 20 ஓவரில் 200+ ரன் எடுக்க வேண்டும் எனும்போது தொடக்கம் முதலே அடித்து ஆடியிருக்க வேண்டும். மிடில் ஆர்டரிலும் அதிரடியாக ஆடும் வீரர்கள் சென்னையில் இல்லை. ஃபீல்டிங்கும் சிறப்பாக இல்லை.
பஞ்சாப் அணி வீரர்கள் கேட்களை ட்ராப் செய்தது, மிஸ் ஃபீல்டிங் என இருந்தாலும் சென்னை அணியில் அடித்து ஆடக்கூடிய சூழல் இல்லை என்பதை இந்தப் போட்டியும் காட்டுக்கிறது.
சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுகே எடுத்திருந்தது. பஞ்சாப் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் யாஹ் தாகூர், க்ளென் மேக்ஸ்வெல் இருவரும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஃபெர்குசன் 2 விக்கெட்கள் எடுத்தார். 5 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 தோல்வி, 1 வெற்றி உடன் 2 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி நான்கு போட்டிகளில் விளையாடி 3 வெற்றி 1 தோல்வி என 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

