IPL 2025 GT vs RR: குஜராத் வெற்றிக்கு தடை போடுமா ராஜஸ்தான்! சாம்சன் பாய்சுக்கு இமாலய இலக்கு வைக்குமா கில் படை?
IPL 2025 RR vs GT: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த தொடரின் 23வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணி ஆடுகிறது.
டாஸ் வென்ற சஞ்சு:
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. முதல் போட்டியில் தோற்ற பிறகு அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றி பெற்ற குஜராத் அணி மிகுந்த புத்துணர்ச்சியுடன் இன்று களமிறங்குகிறது.
பேட்டிங் பலம்:
கேப்டன் சுப்மன்கில், சுதர்சன், பட்லர், ரூதர்ஃபோர்டு, ஷாருக்கான், திவேதியா, வாஷிங்டன் சுந்தர் என பலமிகுந்த பேட்டிங்கை குஜராத் கொண்டுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்க குஜராத் முனைப்பு காட்டும்.
அதேசமயம், அடுத்தடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யத் துடிக்கும். அந்த அணியில் கேப்டன் சாம்சன், ஜெய்ஸ்வால், ரியான் பராக், நிதிஷ் ராணா, ஹெட்மயர், துருவ் ஜோரல் என பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது.
பந்துவீச்சு பலம்:
குஜராத் அணிக்கு தூணாக இருப்பதே பந்துவீச்சு ஆகும். அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக முகமது சிராஜ் ஜொலிக்கிறார். அவருடன் பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா வேகத்தில் அசத்துகிறார். மேலும், அந்த அணியின் பெரும் பலமாக இருப்பது சுழல் ஆகும். கிஷோர், வாஷிங்டன் சுந்தர் சுழலில் அசத்துகின்றனர். உலகத்தரம் வாய்ந்த ரஷீத்கான் ஃபார்முக்கு திரும்பினால் ராஜஸ்தானுக்கு சிக்கல் ஏற்படும்.
அதேபோல, ராஜஸ்தான் அணியில் கடந்த போட்டியில் ஆர்ச்சர் ஃபார்முக்கு திரும்பினார். ஆர்ச்சர், சந்தீப் சர்மா வேகத்தில் பலமாக உள்ளனர். தீக்ஷனா, ஹசரங்கா சுழலில் பக்கபலமாக உள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சன், சுப்மன்கில், ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு, ஷாருக்கான், ராகுல் திவேதியா, அர்ஷத்கான், ரஷீத்கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெய்ஸ்வால், சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக், ஹெட்மயர், துருவ் ஜோரல், ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, பரூக்கி, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் களமிறங்குகின்றனர்.