முதல் இடம் யாருக்கு? பஞ்சாபை பந்தாட காத்திருக்கும் டெல்லி.. இன்றைக்கும் சம்பவம் கன்பார்ம்
கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற இரண்டு அணிகளை தொடரிலிருந்து வெளியேறிய அணிகள் வீழ்த்தியுள்ளன. அதேபாணியில் பஞ்சாப் அணிக்கு டெல்லி அதிர்ச்சி அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் முனைப்பில் கிளமிறங்கியுள்ள பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டூப்ளிசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
பஞ்சாபை பந்தாட காத்திருக்கும் டெல்லி:
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான பிளே-ஆஃப் சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றுவிட்டன. ஆனாலும், லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கப் போகும் அணிகள் எவை என்பது தற்போது வரை உறுதியாகவில்லை. நேரடியாக இறுதிப்போட்டிக்கு நுழைய இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், முதல் இரண்டு இடங்களை பிடிக்க குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை இடையே கடும் போட்டி நிலவுகிறது.
குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு முதல் இரண்டு இடங்களை பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் எளிதாக இருந்த நிலையில், அடுத்தடுத்த தோல்விகளால் அது சற்றே கடினமாகியுள்ளது. இந்த நிலையில், ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் இன்றைய லீக் போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
இதில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டூப்ளிசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.
பஞ்சாப் அணி விவரம்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயாஸ் ஐயர், நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், அஸ்மதுல்லா ஓமர்சாய், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங்
டெல்லி அணி விவரம்: டூப்ளிசிஸ், செடிகுல்லா அடல், கருண் நாயர், சமீர் ரிஸ்வி, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா, முஸ்தபிசுர் ரஹ்மான், முகேஷ் குமார்.
இன்றைய போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறக்கூடும். மறுமுனையில் டெல்லி அணி ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. அதேநேரம், கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற இரண்டு அணிகளை தொடரிலிருந்து வெளியேறிய அணிகள் வீழ்த்தியுள்ளன. அதேபாணியில் பஞ்சாப் அணிக்கு டெல்லி அதிர்ச்சி அளிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.




















