மாத்ரே, ப்ரீவிஸ் அதிரடி.. தூக்கி அடிக்க காத்திருக்கும் சின்னஞ்சிறு சிறுவன்.. கரை சேருமா சென்னை?
சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் கான்வே 10 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். பின்னர், ஆட வந்த உர்வில் படேல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 187 ரன்களை எடுத்தது. இதனால் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்க உள்ளது ராஜஸ்தான்.
மாத்ரே, ப்ரீவிஸ் அதிரடி:
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் ஆடியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி களத்தில் இறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் கான்வே 10 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். பின்னர், ஆட வந்த உர்வில் படேல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஒரு முனையில் ஆயுஷ் மாத்ரே மட்டும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.
மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. 43 ரன்கள் எடுத்திருந்தபோது மாத்ரேவும் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இதையடுத்து, களத்திற்கு வந்த ப்ரீவிஸ், ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். ஆகாஷ் மத்வால் வீசிய பந்தில் அவரும் அவுட்டானார்.
கடைசி இடம் யாருக்கு?
இறுதியில், ஜோடி சேர்ந்த தோனி, துபே ரன்கள் எடுக்க முயற்சி செய்தனர். ஆனால், ராஜஸ்தானி அணி பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி சென்னை அணியை கட்டுப்படுத்தினர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 187 ரன்களை எடுத்தது. இதனால் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்க உள்ளது ராஜஸ்தான். ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய யுத்வீர் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இரு அணிகளும் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், அடுத்த ஆண்டிற்கான பயிற்சி ஆட்டமாகவே இது பார்க்கப்படுகிறது. போட்டியின் முடிவுகள் பிளே-ஆஃப் கணக்குகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அதேநேரம், சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதை தவிர்க்க இன்றைய போடிட்யில் வெற்றி பெற வேண்டியது அவசியம். அப்படி வெற்றி பெற்றால் 9வது இடத்திற்கு முன்னேறக்கூடும்.
பிளே-ஆஃப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை, டெல்லி அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி நாளை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.




















