IPL 2025 CSK vs DC: முதல் வெற்றியைப் பெறுமா சென்னை? இமாலய இலக்கை நிர்ணயிக்குமா டெல்லி?
IPL 2025 CSK vs DC: ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு தொடரைப் பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி தாங்கள் ஆடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று அசுர பலத்துடன் காணப்படுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ப்ளேயிங் லெவன்:
சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா, கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், விஜய் சங்கர், ஜடேஜா, தோனி, அஸ்வின், நூர் அகமது, முகேஷ் செளத்ரி, கலீல் அகமது, பதிரானா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஜேம்ஸ் மெக்குர்க், கே.எல்.ராகுல், அபிஷேக் போரல், அக்ஷர்படேல், ஸ்டப்ஸ், ரிஸ்வி, நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா களமிறங்குகின்றனர்.
கான்வே, முகேஷ் செளத்ரி கம்பேக்:
சென்னை அணியைப் பொறுத்தவரை தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருவதால் இந்த போட்டியில் 3 போட்டிகளிலும் ஜொலிக்காத ராகுல் திரிபாதி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கான்வே களமிறங்குகிறார். சாம் கரணுக்கு பதிலாக முகேஷ் செளத்ரி களமிறங்கியுள்ளார்.
டெல்லி அணியைப் பொறுத்தவரை டுப்ளிசிஸ் இன்று ஆடவில்லை. டெல்லி அணியில் மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா பந்துவீச்சில் பலமாக உள்ளனர். அக்ஷர் படேல், விப்ராஜ் ஆல்ரவுண்டராக இன்று டெல்லிக்கு ஜொலிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பேட்டிங்கில் ஜொலிப்பார்களா?
சென்னை அணிக்கு இன்று ரவீந்திரா, கேப்டன் கெய்க்வாட், விஜய் சங்கர் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். டெல்லி அணியிலும் ஜேக் ப்ரெசர், ராகுல், அபிஷேக் போரல், ஸ்டப்ஸ், ரிஸ்வி, அசுதோஷ் சர்மா ஆகியோர் அதிரடி காட்டினால் சென்னைக்கு சவால் ஆகும்.
சென்னை அணி ஆர்சிபி அணிக்கு எதிராக கடைசியாக இங்கு ஆடிய போட்டியில் 197 ரன்களை சேஸ் செய்ய இயலாமல் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால், இன்றைய போட்டியில் சேசிங்கில் சென்னை கம்பேக் கொடுக்குமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

