SRH vs RCB: தீரா பகையை கொடுத்த ஹைதராபாத்.. முடிவு கட்டுமா பெங்களூரு..? இன்று இரு அணிகளும் மோதல்!
IPL 2024 SRH vs RCB: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இதுவரை 24 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளது.
![SRH vs RCB: தீரா பகையை கொடுத்த ஹைதராபாத்.. முடிவு கட்டுமா பெங்களூரு..? இன்று இரு அணிகளும் மோதல்! IPL 2024 SRH vs RCB Sunrisers Hyderabad vs Royal Challengers Bangalore, 41st Match head to head pitch report SRH vs RCB: தீரா பகையை கொடுத்த ஹைதராபாத்.. முடிவு கட்டுமா பெங்களூரு..? இன்று இரு அணிகளும் மோதல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/5de991c316f63b06085c448f5045fa011714010367326571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியன் பீரிமியர் லீக் 2024 சீசனில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கின்றன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும், தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான பார்மில் உள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்று பெங்களூரு அணி, வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். பெங்களூரு புள்ளிகள் பட்டியலில் கீழே அதாவது 10வது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோல்வியுற்றால் கூட பெங்களூரு அணி பிளேஆஃப் போட்டியில் இருந்து வெளியேறும். அதே நேரத்தில், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் 5 வெற்றி மற்றும் 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக 266 ரன்களும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 287 ரன்களும் எடுத்தது.
For smashing the 4th fastest ton in the history of IPL, Travis Head receives the Player of the Match award 🏆
— IndianPremierLeague (@IPL) April 15, 2024
Scorecard ▶️ https://t.co/OOJP7G9bLr#TATAIPL | #RCBvSRH pic.twitter.com/0TPxWhPg1T
பிட்ச் ரிப்போர்ட்:
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தின் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஸ்டேடியத்தில் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அதிகளவில் கடந்த போட்டிகளில் அடித்ததை நாம் பார்த்தோம். ஏனெனில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் போல் இந்த ஸ்டேடியமும் மிக சிறியது. இங்குதான் ஹைதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ரன்கள் குவித்தது.
அதே நேரத்தில், போட்டியில் டாஸ் வென்ற அணி, முதலில் பந்து வீச வேண்டும். ஏனெனில் இந்த ஸ்டேடியத்தில், 40 போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் 32 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி வென்றுள்ளது.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இதுவரை 24 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளது. இதில், ஹைதராபாத் அணி அதிகபட்சமாக 13 போட்டிகளிலும், பெங்களூரு அணி 10 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. மேலும், ஒரு போட்டி முடிவில்லாமல் முடிவடைந்துள்ளது.
பெங்களூரு Vs ஹைதராபாத் நேருக்கு நேர்
மொத்தப் போட்டிகள்: 24
ஐதராபாத் வெற்றி: 13
பெங்களூரு வெற்றி: 10
முடிவு இல்லை: 1
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, வில் ஜாக், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், கர்ண் சர்மா, லாக்கி பெர்குசன், யாஷ் தயால், முகமது சிராஜ்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)