IPL 2024 Prize Money: ஐபிஎல் ஃபைனல் - கோடிகளை அள்ளப்போகும் அணிகள், மொத்த பரிசுத்தொகை - யாருக்கு எவ்வளவு?
IPL 2024 Prize Money: நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் வழங்கப்பட உள்ள, பரிசுத்தொகை தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

IPL 2024 Prize Money: நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான மொத்த பரிசுத் தொகையாக, 46 கோடியே 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் பரிசுத்தொகை:
கடந்த 2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபிஎல் தொடர், தற்போது கிரிக்கெட்டின் வட்வத்தையே மாற்றி அமைத்துள்ளது. விளையாட்டின் மீதான பார்வையை மாற்றி உள்ளூர் தாண்டி சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதன் காரணமாகவே, முதல் சீசனில் வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை காட்டிலும், தற்போது சுமார் 5 மடங்கு அதிக பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்ற அணிக்கு ரூ 4.8 கோடியும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ 2.4 கோடியும் வழங்கப்பட்டது. அன்றைய தேதியில் கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை இதுவாகும்.
ரூ.46.5 கோடி பரிசுத்தொகை:
தற்போதைய சூழலின்படி நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மொத்த பரிசுத்தொகையாக, 46 கோடியே 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு சீசன்களாகவே இந்த பரிசுத்தொகை தான் வழங்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் போட்டிகள் மீது தொடர்ந்து அதிகரித்து வரும், எதிர்பார்ப்புகள் காரணமாக அடுத்த ஆண்டு பரிசுத்தொகை மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை?
- இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி பரிசாக வழங்கப்படும்
- இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடி பரிசாக வழங்கப்படும்
- மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.7 கோடி பரிசாக வழங்கப்படும்
- நான்காவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.5 கோடி பரிசாக வழங்கப்படும்
தனிநபர்களுக்கான பரிசுத்தொகை:
- அதிகப்படியான ரன்களை சேர்த்த வீரருக்கு இளஞ்சிவப்பு நிற தொப்பியுடன் ரூ.15 லட்சம் பரிசாக வழங்கப்படும்
- அதிகப்படியான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரருக்கு ஊதா நிற தொப்பியுடன் ரூ.15 லட்சம் பரிசாக வழங்கப்படும்
- தொடரின் சிறந்த வளர்ந்து வரும் வீரர் என தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.20 லட்சம் பரிசாக வழங்கப்படும்
- தொடரின் மிகுந்த மதிப்புமிக்க வீரர் என தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.12 லட்சம் பரிசாக வழங்கப்படும்
- பவர் பிளேயர் ஆஃப் தி சீசன் விருதை பெறுபவருக்கு ரூ.15 லட்சம் பரிசாக வழங்கப்படும்
- சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி சீசன் விருதை பெறுபவருக்கு ரூ.15 லட்சம் பரிசாக வழங்கப்படும்
- கேம் சேஞ்சர் ஆஃப் தி சீசன் விருதை பெறுபவருக்கு ரூ.12 லட்சம் பரிசாக வழங்கப்படும்
பரிசுத்தொகை வரலாறு:
- 2010 முதல் 2013ம் ஆண்டு வரையில் வெற்றியாளருக்கு ரூ.10 கோடியும், இரண்டவது இடத்தை பிடித்தவருக்கு ரூ.5 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.
- 2014 முதல் வெற்றியாளருக்கான பரிசுத் தொகை ரூ.15 கோடியாகவும், இரண்டாம் இடத்தை பிடித்தவருக்கான பரிசுத்தொகை ரூ.10 கோடியாகவும் உயர்த்தப்பட்டது.
- 2016ம் ஆண்டு அந்த பரிசுத்தொகை மேலும் உயர்த்தப்பட்டது.
- 2017 முதல் 2019ம் ஆண்டு வரையிலான தொடர்களுக்கு ஐபிஎல் பரிசுத்தொகை ஏற்ற, இறக்கமாக இருந்தது
- கொரோனா காரணமாக 2020ம் ஆண்டு எடிஷனில் வெற்றியாளருக்கு ரூ. 10 கோடியும், இரண்டாம் இடம் பிடித்தவருக்கு ரூ. 6.25 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.
- 2021 எடிஷனில் வெற்றியாளருக்கு ரூ. 20 கோடியும், இரண்டாவது இடம் பிடித்தவருக்கு ரூ.12.2 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

