IPL 2024 Play Offs: ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் ஸ்டார் ப்ளேயர்கள்; அதிர்ச்சியில் CSK, RCB, RR!
IPL 2024: நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் பெரும்பாலும் முடிவடைந்து ப்ளேஆஃப் சுற்றுக்கு அணிகள் மும்முரமாக போட்டி போட்டு வருகின்றது.
மொத்தம் 70 லீக் போட்டிகளுக்கு அட்டவணை படுத்தப்பட்டு மிகவும் பிரமாண்ட மற்றும் மிக நீண்ட டி20 லீக் கிரிக்கெட் தொடராக நடைபெற்று வருகின்றது. இதுவரை அதாவது மே 13ஆம் தேதிவரை ( குஜராத்-கொல்கத்தா போட்டியைச் சேர்க்காமல்) 62 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. அதேபோல் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பினை இழந்துள்ளது. அடுத்த மூன்று இடத்திற்காக மற்ற அணிகள் கடுமையாக போராடி வருகின்றது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இந்த வார இறுதியில் இங்கிலாந்திற்கு திரும்பவுள்ளனர். இதனால் இங்கிலாந்து வீரர்கள் இங்கிலாந்துக்கு இந்த வார இறுதியில் திரும்பவுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் டி20 உலகக் கோப்பைக்கு தங்களது வீரர்களை ஆயத்தமாக்க அவர்களை தங்களது நாட்டிற்கு அழைத்துள்ளது. அதன் அடிப்படையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் மொயின் அலி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடும் இங்கிலாந்து டி20 அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், பெங்களூரு அணியில் விளையாடும் வில் ஜாக்ஸ் மற்றும் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ள ரீசோ டாப்லி, பஞ்சாப் அணியின் கேப்டனாக உள்ள சாம் கரன், பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் மற்றும் ஆல் - ரவுண்டர் லிவிங்ஸ்டன் மற்றும் கொல்கத்தா அணியில் விளையாடும் பிலிப் சால்ட் ஆகியோரும் இங்கிலாந்துக்கு திரும்பவுள்ளனர்.
இங்கிலாந்து வீரர்களுக்கான அழைப்பினை இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவித்திருந்ததால் இங்கிலாந்து வீரர்கள் இந்த வார இறுதியில் இருந்து நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகுகின்றனர். இவர்கள் ப்ளேஆஃப் சுற்றில் விளையாட மாட்டார்கள் என்பதால் இது ஐபிஎல் அணிகளுக்கு பாதகமாக அமைந்துள்ளது.
Jos Buttler says "Good bye" to IPL 2024...!!!
— Johns. (@CricCrazyJohns) May 13, 2024
- A big loss for Rajasthan Royals. pic.twitter.com/rNhRU7iwyp
குறிப்பாக ப்ளேஆஃப் சுற்றினை உறுதி செய்த கொல்கத்தா அணியில் இருந்து தொடக்க வீரர் பிலிப் சால்ட் விலகுவது அந்த அணி எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அதேபோல், ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரரும் நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டு சதங்கள் விளாசியவருமான ஜாஸ் பட்லர் அந்த அணியில் இருந்து விலகுவது ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைய அதிக வாய்ப்புள்ளது.
அதேபோல் தனது அதிரடியான ஆட்டத்தினால் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது மட்டும் இல்லாமல் அட்டகாசமான சதம் விளாசிய வில் ஜாக்ஸ் பெங்களூரு அணியில் இருந்து வெளியேறுவதால் ஏற்படும் தாக்கத்தைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.