மேலும் அறிய

PBKS vs CSK LIVE Score: 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது சி.எஸ்.கே!

IPL 2024, PBKS vs CSK LIVE Score: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியின் லைவ் ஸ்கோரை இங்கே காணலாம்

Key Events
IPL 2024 PBKS vs CSK LIVE SCore Updates Punjab Kings vs Chennai Super Kings Match 53 Live Cricket Score Ball by Ball Update HPCA Stadium PBKS vs CSK LIVE Score: 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது சி.எஸ்.கே!
சாம் கர்ரன் - ருதுராஜ் கெய்க்வாட்

Background

ஐபிஎல் சீசன் 17:

இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 52 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே-ஆஃப் ரேஸ் வேகமெடுத்துள்ளது. மும்பை அணி நடப்பு தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறி உள்ளது. மீதமுள்ள 9 அணிகளும் 4 இடங்களுக்காக முட்டி மோதி வருகின்றன. அந்த வகையில் இன்றைய போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் சாம் கர்ரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.

சென்னை - பஞ்சாப் பலப்பரீட்சை:

இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில், மாலை 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சென்னை அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் ஐந்தில் வென்று,  புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய நான்கு லீக் போட்டிகளில்  மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. அதில் பஞ்சாப் அணியுடனான தோல்வியும் அடங்கும்.  இதனால், இன்றைய போட்டியில் வென்று பழிதீர்ப்பதோடு,  பிளே-ஆஃப் சுற்றுக்கான தனது வாய்ப்பை தக்க வைக்கவும் சென்னை அணி  வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பஞ்சாப் அணியோ 10 போட்டிகளில் விளையாடி நான்கில்  மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. அதேநேரம், பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க மீதமுள்ள அனைத்து லீக் போட்டிகளிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற வேண்டியது அவசியம். சென்னை அணிக்கு எதிராக களம் கண்ட கடைசி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள உத்வேகத்துடன் பஞ்சாப் அணி இன்று களமிறங்குகிறது. 

பலம், பலவீனங்கள்:

உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது பஞ்சாப் அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருந்த அந்த அணி, கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் வென்று வலுவான கம்பேக் கொடுத்துள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும், கடந்த இரண்டு போட்டிகளில் செயல்பட்டதை போன்றே,  செயல்பட்டால் இன்றைய போட்டியிலும் பஞ்சாப் அணியால் வாகை சூட முடியும். பேர்ஸ்டோ, ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா ஆகியோர் இந்த சீசனில் பஞ்சாப் அணியின் தூண்களாக மாற்யுள்ளனர். பந்துவீச்சில் அந்த அணி இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பவர்பிளேயில் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறுவது சென்னை அணியின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. ரகானேவை பிளேயிங்லெவனில் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்களே கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர். கேப்டன் ருதுராஜ், ஷிவம் துபே நல்ல ஃபார்மில் உள்ளனர். சாஹர் காயமடைந்து இருப்பது, முஸ்தஃபிசுர் சொந்த ஊர் திரும்பி இருப்பது சென்னை அணியின் பவுலிங் யூனிட்டை மேலும் வலுவிழக்கச் செய்துள்ளது. எனவே இன்றைய போட்டியில் வெல்ல சென்னை அணி கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது.

நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 15 முறையும், பஞ்சாப் அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 231 ரன்களையும், குறைந்தபட்சமாக 92 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 240 ரன்களையும், குறைந்தபட்சமாக 120 ரன்களையும் பதிவு செய்துள்ளது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி:

தர்மசாலா மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களால் விரும்பப்படும் மைதானங்களில் ஒன்றாகும். இது வேகம் மற்றும் பவுன்சர்களுக்கு பெயர் பெற்றது. முதலில் பந்துவீசுவதைத் தேர்ந்தெடுத்து, எதிரணியை குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்துவதே சிறந்த முடிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்)

ஜானி பேர்ஸ்டோவ், ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், சாம் கர்ரன்(கேப்டன்) , ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர் ), அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்)

அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன் ), டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், ரிச்சர்ட் க்ளீசன், துஷார் தேஷ்பாண்டே

18:54 PM (IST)  •  05 May 2024

PBKS vs CSK LIVE Score: ராகுல் சஹார் அவுட்!

ராகுல் சஹார் 16 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்துள்ளார்.

18:51 PM (IST)  •  05 May 2024

PBKS vs CSK LIVE Score: 17 ஓவர்கள் முடிந்தது!

17 ஓவர்களில் முடிந்த நிலையில் 118 ரன்கள் எடுத்துள்ளது.

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget