மேலும் அறிய

IPL 2024: அதிக வயது வீரராக தோனி.. இளம் வயது வீரராக ரகுவன்ஷி.. ஒவ்வொரு அணியிலும் இளம் & வயதான வீரர் லிஸ்ட்!

ஐபிஎல் 2024ல் விளையாடும் மிகவும் வயதான மற்றும் இளமையான வீரர் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 சீசன் 17 வருகின்ற மார்ச் 22ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த லீக் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் பல அனுபவ வீரர்களின் ஆதிக்கத்தை இளம் வீரர்கள் எத்தனையோ பேர் தவிடு பொடியாக்கியுள்ளனர். 

இதன்மூலம், இந்திய அணிக்கு தகுதி பெற்றவர்கள் ஏராளம். கடந்த சீசனில் கூட கொல்கத்தா அணிக்காக விளையாடிய ரிங்கு சிங், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து புகழ்பெற்று இந்திய அணிக்கும் தேர்வானார். இந்தநிலையில், ஐபிஎல் 2024ல் விளையாடும் மிகவும் வயதான மற்றும் இளமையான வீரர் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

மிகவும் வயதான வீரர்: 

ஐபிஎல் போட்டிகளில் மிக நீண்ட காலமாக விளையாடி வரும் வீரர்கள் பலர் உள்ளனர். இதில், மிக முக்கியமான வீரர்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சிஎஸ்கே அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனிதான். இவருக்கு தற்போது 42 வயது ஆகிறது. 

எம்.எஸ்.தோனி ஐபிஎல் முதல் சீசனில் இருந்து இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது தலைமையின் கீழ் சென்னை அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐபிஎல்லில் இதுவ்ரை தோனி 250 போட்டிகளில் விளையாடி 38.79 சராசரியில் 24 அரைசதம் உட்பட 5, 082 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஐபிஎல் லீக் வரலாற்றில் தோனி மிகவும் வெற்றிகரமான விக்கெட் கீப்பர் ஆவார். இதுவரை 180 முறை பேட்ஸ்மேன்களை அவுட் செய்துள்ளார். 

மிகவும் இளம் வயது வீரர்: 

ஐபிஎல்2024ல் மிகவும் இளைய வீரர் ஆங்கிரிஷ் ரகுவன்ஷி ஆவார். இவர் கடந்த 2005ம் ஆண்டு ஜூன் 5ல் பிறந்தவர். 2024 ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 20 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது ஆங்கிரிஷ் பிரபலமானார். 2022 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர். அந்த நேரத்தில், ஆங்கிரிஷ் 6 போட்டிகளில் 46.33 சராசரியில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் உட்பட  278  ரன்கள் எடுத்தார். 

ஒவ்வொரு அணியில் அதிக வயது இளம் வயது வீரர்கள் பட்டியல் இதோ:

இளம் வயது வீரர்..

அணி இளைய வீரர் வயது
குஜராத் டைட்டன்ஸ் நூர் அகமது 18
லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அர்ஷின் குல்கர்னி  19
ராஜஸ்தான் ராயல்ஸ் குணால் சிங் ரத்தோர் 21
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிதிஷ் குமார் ரெட்டி 20
சென்னை சூப்பர் கிங்ஸ் அவனிஷ் ஆரவெல்லி ராவ் 18
டெல்லி கேப்பிடல்ஸ் ஸ்வஸ்திக் சிகாரா 18
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சவுரவ் சவுகான் 23
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அங்கிரிஷ் ரகுவன்ஷி 18
மும்பை இந்தியன்ஸ் டெவால்ட் ப்ரீவிஸ் 20
பஞ்சாப் கிங்ஸ் பிரப்சிம்ரன் சிங் 23

அதிக வயது வீரர்..

அணி வயதான வீரர் வயது
குஜராத் டைட்டன்ஸ் விருத்திமான் சாஹா 39
லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அமித் மிஸ்ரா 41
ராஜஸ்தான் ராயல்ஸ் ஆர் அஸ்வின் 37
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புவனேஷ்வர் குமார் 34
சென்னை சூப்பர் கிங்ஸ் எம்எஸ் தோனி 42
டெல்லி கேப்பிடல்ஸ் டேவிட் வார்னர் 37
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஃபாஃப் டு பிளெசிஸ் 39
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  ஆண்ட்ரே ரஸ்ஸல் 35
மும்பை இந்தியன்ஸ் முகமது நபி 39
பஞ்சாப் கிங்ஸ் ஷிகர் தவான் 38
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
TVK Vijay alliance: விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்
விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Embed widget