மேலும் அறிய

Most Ducks In IPL History: ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட்.. மோசமான சாதனையை முத்திரை குத்திக்கொண்ட ரோஹித்!

ஐபிஎல் வரலாற்றில் 17வது முறையாக டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார் ரோஹித்.

ஐபிஎல் 2024 இன் 14வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அப்போது, மும்பை அணி 20 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மும்பை அணியின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களில் மூன்று பேர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி நடையைக்கட்டினர். ரோஹித் சர்மா, நமன் தீர் மற்றும் டெவால்ட் ப்ரீவிஸ் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறம் அதேசமயம், இஷான் கிஷான் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஐபிஎல்-லில் ஒரு அணியின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களில் மூன்று பேர் கணக்கைத் திறக்காதது இது ஆறாவது முறையாகும். அதே நேரத்தில், ரோஹித் சர்மா தனது பெயரில் மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். 

ரோஹித் சர்மாவின் மோசமான சாதனை: 

டிரென்ட் போல்ட் வீசிய போட்டியின் முதல் ஓவரிலேயே விக்கெட் கீப்பர் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ரோஹித். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் 17வது முறையாக டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார் ரோஹித். இதையடுத்து, தினேஷ் கார்த்திக்கின் சாதனையை சமன் செய்தார் ரோஹித் சர்மா. தினேஷ் கார்த்திக்கும் இதுவரை 17 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் நான்கு பேட்ஸ்மேன்கள் கூட்டாக உள்ளனர். கிளென் மேக்ஸ்வெல், பியூஷ் சாவ்லா, மந்தீப் சிங், சுனில் நரைன் ஆகியோர் தலா 15 முறை டக் அவுட்டாகியுள்ளனர்.

ஐபிஎல்லில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர்கள்: 

  1. ரோஹித் சர்மா - 17 முறை
  2. தினேஷ் கார்த்திக் – 17 முறை
  3. கிளென் மேக்ஸ்வெல் – 15 முறை
  4. பியூஷ் சாவ்லா – 15 முறை
  5. மன்தீப் சிங் – 15 முறை
  6. சுனில் நரைன் – 15 முறை

ஐந்தாவது முறையாக ரோஹித்தை வெளியேற்றிய போல்ட்:

ஐபிஎல் வரலாற்றில் ரோஹித் சர்மா ஐந்தாவது முறையாக போல்ட்டின் பந்தில் அவுட் ஆனார்.  ஐபிஎல் 2020 முதல் தற்போது நடைபெற்று வரும் 17வது சீசன் வரை, போல்ட் தான் வீசிய முதல் ஓவரில் இதுவரை 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த வரிசையில் மற்ற எந்த பந்துவீச்சாளராலும் எட்டு விக்கெட்டுகளுக்கு மேல் எடுக்க முடியவில்லை.

ராஜஸ்தானுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் மும்பையின் குறைந்த ஸ்கோர்:

  • 94/8, ஜெய்ப்பூர், 2011
  • 125/9, வான்கடே, 2024*
  • 133/5, வான்கடே, 2011
  • 145/7, ஜெய்ப்பூர், 2008

சாஹல் சிறப்பான சாதனை படைப்பு:

மும்பை பேட்ஸ்மேன்களான திலக் வர்மா (32), கேப்டன் ஹர்திக் பாண்டியா (34), ஜெரால்டு கோட்ஸி (4) ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தினார் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பெயரில் மிக முக்கிய சாதனையை படைத்தார் சாஹல். ஐபிஎல்லில் அதிக முறை ஒரு போட்டியில் மூன்று விக்கெட்டுகளை (ஒரு இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகள்) எடுத்ததன் அடிப்படையில் சாஹல் ஜஸ்பிரித் பும்ராவை சமன் செய்தார். இந்த இரண்டு பந்துவீச்சாளர்களும் ஒரு இன்னிங்ஸில் தலா 20 முறை 3 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். இந்த பட்டியலில் லசித் மலிங்கா 19 முறையும், அமித் மிஸ்ரா 17 முறையும் ஒரு இன்னிங்ஸில் 3 விக்கெட்களை அதிக முறை எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget