MI vs DC LIVE Score: இறுதிவரை போராடிய டெல்லி தோல்வி! முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை!
IPL 2024 MI vs DC: டெல்லி கேபிடல்ஸ் - மும்பை அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே விரிவாக காணலாம்.

Background
நடப்பு ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன. 20வது போட்டியாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி மும்பை அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும். இந்த போட்டியில் கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் மும்பை அணி களமிறங்கியுள்ளது.
இந்த தொடரில் இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ள மும்பை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரின் முதல் வெற்றியை பெற ஆர்வத்துடன் உள்ளது. அதேசமயம், தொடரில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுள்ள டெல்லி அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற ஆவலுடன் உள்ளது. வான்கடேவில் நடைபெற உள்ள இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இதன்படி, மும்பை அணி பேட்டிங்கைத் தொடங்க உள்ளது. மும்பை அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், முகமது நபி, ஷெபர்ட், பியூஷ்சாவ்லா. கோட்ஸி, பும்ரா ஆகியோர் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்குகின்றனர். டெல்லி அணியில் ரிஷப்பண்ட் தலைமையில் வார்னர், பிரித்விஷா, அபிஷேக் போரல், ஸ்டப்ஸ், அக்ஷர் படேல், லலித் யாதவ், ரிச்சர்ட்சன், நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
இறுதிவரை போராடிய டெல்லி தோல்வி! முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை!
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் மும்பை அணி பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும்.
1 ரன்னில் அவுட்டானார் ரிஷப்பண்ட்! முதல் வெற்றியை பெறுமா மும்பை?
டெல்லி கேப்டன் ரிஷப்பண்ட் 1 ரன்னில் அவுட்டானார். இதனால், டெல்லி அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.




















