மேலும் அறிய

Sarfaraz Khan: ஒரே போட்டியில் வெறிகொண்டு அடி! ஐபிஎல்லில் சர்பராஸ் கானை வாங்க துடிக்கும் காம்பீர்!

சர்பராஸ் கானின் அறிமுகத்திற்கு பிறகு, ஐபிஎல்லில் சில அணிகள் அவரை தங்கள் அணியில் சேர்க்க போட்டாப்போட்டி நடைபெற்று வருகிறது. 

ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. முதல் போட்டியிலேயே கேப்டன் ரோஹித்தின் நம்பிக்கையை நிலைநாட்டிய சர்பராஸ் கான் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார். 

இதன் மூலம் டெஸ்ட் அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை சர்பராஸ் கான் படைத்தார். சர்பராஸ் கானின் அறிமுகத்திற்கு பிறகு, ஐபிஎல்லில் சில அணிகள் அவரை தங்கள் அணியில் சேர்க்க போட்டாப்போட்டி போட்டு வருகிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சர்பராஸ் கான் 66 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 62 ரன்கள் எடுத்தார். அதேபோல், இரண்டாவது இன்னிங்ஸிலும் சர்பராஸ் கான் 72 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்தார். 

சர்பராஸ் கானை வாங்க கடும் பந்தயம்..?

ஊடக அறிக்கையின்படி, சர்பராஸ் கானுக்காக மூன்று ஐபிஎல் அணிகள் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்க தயாராகி உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகியவை அடங்கும். இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சர்பராஸ் கான் ஏற்கனவே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2024 ஏலத்தில் சர்பராஸ் கானை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. கடந்த சீசனில் சர்பராஸ் கான், டெல்லி அணிக்காக களமிறங்கினார். ஆனால், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படவில்லை. அதனால், அந்த அணி அவரை விடுவித்தது. 

 இந்திய அணிக்காக அறிமுகமான பிறகு, சர்பராஸ் கானை வாங்க பல ஐபிஎல் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.  சர்பராஸுக்காக எந்த தொகையையும் கொடுக்க அணிகள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், ஏலத்தில் விற்பனையாகாமல் இருந்த சர்பராஸ் கான் எப்படி ஐபிஎல்-க்குள் வருவார் என்பது மிகப்பெரிய கேள்வி. 

சர்பராஸ் கானை வாங்க துடிக்கும் கௌதம் காம்பீர்: 

இந்தநிலையில், 26 வயதான சர்பராஸ் கானை ஒப்பந்தம் செய்ய கேகேஆர் அணியின் ஆலோசகர் கௌதம் காம்பீர் அந்த அணி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. 

ஐபிஎல் 2024 வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸால் விடுவிக்கப்பட்ட சர்ஃபராஸின் அடிப்படை விலை ரூ.20 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது, மூன்று உரிமையாளர்களும் சர்ஃபராஸை வாங்குவதற்கு போதுமான பணத்தை தங்கள் எஞ்சிய பணப்பையில் வைத்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.1 கோடியும், ஆர்சிபி அணி ரூ.2.85 கோடியும்,  கேகேஆர் அணி ரூ.1.35 கோடியுடன் உள்ளன.

சர்பராஸ் கான் ஐபிஎல்லில் எப்படி நுழைய முடியும்..?

ஏலம் முடிந்ததால், இப்போது வாங்க துடிக்கும் அணிகள் சர்பராஸ் கானை நேரடியாக அணியில் எடுக்க முடியாது. சர்ஃபராஸ் ஐபிஎல்லில் ஒரே ஒரு வழியில் மட்டுமே நுழைய முடியும், அதாவது லீக் தொடங்கும் முன்னரோ அல்லது தொடக்கத்திலோ ஏதேனும் ஒரு அணியின் வீரர் காயம் அடைந்தால், அந்த அணி அந்த வீரருக்கு மாற்றாக சர்பராஸை நியமிக்கும். இது தவிர இந்த சீசனில் இணைய சர்பராஸுக்கு வேறு வழியில்லை. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget