KKR vs SRH Innings Highlights: மிரட்டல் பவுலிங்..ஹைதராபாத்தை சுருட்டி வீசிய KKR! சாம்பியன் ஆகுமா?
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.
சேப்பாக்கத்தில் இறுதிப் போட்டி:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் சீசன் 17ல் இன்று இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது இந்த போட்டி. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தொடங்கினார். தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களம் இறங்கினார்கள். இறுதிப் போட்டி என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு நிலவியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏமாற்றிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்:
ஆனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். அதன்படி, அபிஷேக் சர்மா 2 ரன்கள் கிளின் போல்ட் ஆகி விக்கெட்டை இழந்தார். அதேபோல் டிராவிஸ் ஹெட்டும் டக் அவுட் ஆகி வெளியேறினார். 6 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஹைதராபாத் அணி.
பின்னர் வந்த ராகுல் திரிபாதி எய்டன் மார்க்ரம் உடன் ஜோடி சேர்ந்தார். இவர்களது பார்ட்னட்ஷிப்பாவது அந்த அணியை மீட்குமா என்ற நிலைய்ல் திரிபாதி 9 ரன்களில் நடையைக்கட்டினார். அடுத்ததாக களம் இறங்கிய நிதிஷ் ரெட்டி மார்க்ரம் உடன் இணைந்து பொறுமையாக விளையாடினார். அந்தவகையில் 10 ரன்கள் களத்தில் நின்ற நிதிஷ் ரெட்டி ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட மொத்தம் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
மறுபுறம் மிரட்டி கொண்டிருந்தார்கள் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள். இதனிடையே எய்டன் மார்க்ரமும் விக்கெட்டை இழந்தார். 23 பந்துகள் களத்தில் நின்ற மார்க்ரம் 3 பவுண்டரிகள் உட்பட 20 ரன்கள் எடுத்தார். 10.2 ஓவர்கள் முடிவில் 62 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
113 ரன்களில் சுருண்ட ஹைதராபாத்:
அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் 17 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க இதனிடையே சக்பாஸ் அகமது அப்துல் சமத் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த பேட் கம்மின்ஸ் சரிவில் இருந்த அணியை ஓரளவிற்கு மீட்டு கொடுத்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் 113 ரன்களை எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்க உள்ள கொல்கத்தா அணி.