(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2024 Final: தொடங்கியது இறுதிப் போட்டி! ஹைதரபாத்தை மிரட்டப்போகும் டாப் 5 KKR வீரர்கள்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.
இறுதிப் போட்டி:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் சீசன் 17-ல் இன்று (மே 26) இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. அதன்படி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தங்களது மூன்றாவது கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களம் காண உள்ளது. இச்சூழலில் அந்த அணியில் கோப்பையை கைப்பற்ற உதவும் 5 வீரர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்:
1. சுனில் நரைன்
வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான சுனில் நரைன் இந்த சீசனில் அருமையான பார்மில் இருக்கிறார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் இவர் இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
𝐒𝐮𝐫𝐫𝐞𝐚𝐥 Narine 🤯#RCBvKKR #IPLonJioCinema #JioCinemaSports #TATAIPL pic.twitter.com/6dfsPr9S9S
— JioCinema (@JioCinema) March 29, 2024
13 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள சுனில் நரைன் 179.85 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்களை விளாசியுள்ளார். 400 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட மூன்றாவது வீரராக இருக்கிறார். இது ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு நிச்சயம் அச்சுறுத்தலாக இருக்கும்.
2. வெங்கடேஸ் ஐயர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான குவாலிபையர் போட்டியில் 28 பந்துகளில் 51 ரன்களை குவித்து அந்த அணியை மிரட்டினார். குவாலிபையர் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெறுவதற்கு இவரது அதிரடி ஆட்டம் மிக முக்கியாமனதாக இருந்தது.
Venkatesh F-IYER 🔥🔥
— IndianPremierLeague (@IPL) March 29, 2024
Head to @JioCinema and @StarSportsIndia to watch the match LIVE#TATAIPL | #RCBvKKR pic.twitter.com/2EeUvGTR8J
அதன்படி 12 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள இவர் 153.62 ஸ்டிரைக் ரேட்டில் மூன்று அரைசதங்கள் உட்பட 318 ரன்களை விளசி உள்ளார். அந்தவகையில் கொல்கத்தா அணியின் முக்கிய வீரராக இந்த சீசனில் இருக்கும் வெங்கடேஸ் ஐயர் இறுதிப் போட்டியில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
3. ஆண்ட்ரே ரஸ்ஸல்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் மிரட்டலான ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல். 185 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 222 ரன்களை இந்த சீசனில் விளாசி இருக்கிறார்.
Russell's Muscles 💪
— IndianPremierLeague (@IPL) March 23, 2024
Andre Russell is hitting it out of park with ease 😮
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱
Match Updates ▶️ https://t.co/xjNjyPa8V4 #TATAIPL | #KKRvSRH | @KKRiders pic.twitter.com/Od84aM2rMr
13 இன்னிங்ஸ்களில் 17.25 சராசரியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய அவரது பந்துவீச்சு திறமை இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணிக்கு கைகொடுக்கும் பட்சத்தில் அந்த அணி கோப்பையை கைப்பற்ற இது உதவும்.
4. மிட்செல் ஸ்டார்க்
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மிரட்டினார் என்றே சொல்ல வேண்டும். குவாலிஃபையர் 1 இல் ஸ்டார்க்கின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ரூபாய் 24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இது அப்போது பெரும் கேள்விகளை எழுப்பியது.
Mitchell Starc with the final wicket for @KKRiders 💪
— IndianPremierLeague (@IPL) May 3, 2024
Watch the recap on @StarSportsIndia and @JioCinema 💻📱#TATAIPL | #MIvKKR pic.twitter.com/aUz2emSPdV
ஆனால் இன்றைக்கு கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு வந்ததற்கு இவரது பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த சீசனில் இதுவரை 15 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார் மிட்செல் ஸ்டார்க்.
5. வருண் சக்கரவர்த்தி
கொல்கத்தா அணியில் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் வருண் சக்கரவர்த்தி. அதன்படி இந்த சீசனில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதில் அதிகபட்சமாக 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
Make that 2️⃣ for Varun Chakaravarthy ✌️
— IndianPremierLeague (@IPL) May 3, 2024
Further trouble for the hosts as Tilak Varma departs
Watch the match LIVE on @StarSportsIndia and @JioCinema 💻📱#TATAIPL | #MIvKKR | @KKRiders pic.twitter.com/CMHC9xNlKl
பேட்டிங்கிங்கிலும் சிறப்பாகவே விளையாடி இருக்கும் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணிக்கு மற்றும் ஒரு அச்சுறுத்தலான வீரராக இருப்பர் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க: