Fastest 50 in IPL: ஐ.பி.எல் வான வேடிக்கை...சிக்ஸர் மழையில் ஹைதராபாத்! டிராவிஸ் ஹெட் - அபிஷேசக் சர்மா அசத்தல்!
சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் டிராவிஸ் ஹெட் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா அதிவேக அரைசதம் விளாசியுள்ளனர்.
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 27) நடைபெற்று வரும் 8 வது லீக் போட்டியில் மும்பை மற்றும் சன் ரைசர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. அந்தவகையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதிவேக அரைசதம்:
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் 13 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 11 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது டிராவிஸ் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்தார் அபிஷேக் சர்மா.
டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சை பறக்க விட்டனர். அந்த வகையில் மும்பை அணியின் பந்து வீச்சை சிக்ஸரும் பவுண்டரியும் என மாறி மாறி பறக்க விட்டனர். ஒரு கட்டத்தில் விக்கெட் எடுக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள்.
அசத்திய டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா:
8.02 pm - Travis Head smashed the fastest fifty by SRH batter.
— Johns. (@CricCrazyJohns) March 27, 2024
8.24 pm - Abhishek Sharma breaks the record of Travis Head for fastest fifty by SRH batter. pic.twitter.com/lk2fzT1xFn
இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 18 பந்துகளில் 57 ரன்களை விளாசினார்கள். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் மைதனாத்தில் இருந்த ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர்.
அந்தவகையில் அதிவேகமாக அரைசதம் விளாசினார் டிராவிஸ் ஹெட்.
WHOLE STADIUM STANDING FOR TRAVIS HEAD. 👏 pic.twitter.com/agaGKdPhO4
— Johns. (@CricCrazyJohns) March 27, 2024
அதன்படி, 18 பந்துகளில் அரைசதம் விளாசினார். இவரின் சாதனையை சில நிமிடங்களில் முறியடித்தார் அபிஷேக் சர்மா.16 பந்துகளில் தன்னுடைய அரைசதத்தை பதிவு செய்தார். இவ்வாறாக இருவரும் அதிரடிகாட்டினார்கள். இதில் டிராவிஸ் ஹெட் 24 பந்துகள் களத்தில் நின்று 9 பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்கள் என மொத்தம் 62 ரன்களை குவித்தார். அதேபோல், அபிஷேக் சர்மா 23 பந்துகள் களத்தில் நின்று 3 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் என மொத்தம் 63 ரன்களை விளாசினார்.