IPL 2024 Awards: கொல்கத்தா வென்ற பரிசுத்தொகை - கோலி டூ சுனில் நரைன் - ஐபிஎல் கொட்டிய பணமும், விருதுகளும்
IPL 2024 Awards: நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வென்ற நிலையில், யார் யாருக்கு என்ன விருதுகள் வழங்கப்பட்டன என்பனவற்றை இந்த தொகுப்பில் அறியலாம்.
IPL 2024 Awards: நடப்பாண்டிற்கான ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு, 20 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
கொல்கத்தா அணி சாம்பியன்:
மார்ச் மாத இறுதியில் தொடங்கிய நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர், நேற்றுடன் நிறைவுபெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் வெறும் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 10.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், மூன்றாவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்று அந்த அணி அசத்தியுள்ளது. வெற்றி பெற்ற கொல்கத்தா அணிக்கு 20 கோடி ரூபாய் உட்பட பல்வேறு பரிசுகள் நேற்று வழங்கப்பட்டன.
யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை?
- இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு ரூ.20 கோடி பரிசாக வழங்கப்பட்டது
- இரண்டாவது இடம் பிடித்த ஐதராபாத் அணிக்கு ரூ.13 கோடி பரிசாக வழங்கப்பட்டது
- மூன்றாவது இடம் பிடித்த ராஜஸ்தான் அணிக்கு ரூ.7 கோடி பரிசாக வழங்கப்பட்டது
- நான்காவது இடம் பிடித்த பெங்களூர் அணிக்கு ரூ.6.5 கோடி பரிசாக வழங்கப்பட்டது
தனிநபர்களுக்கான பரிசுத்தொகை:
- அதிகப்படியான ரன்களை சேர்த்த வீரருக்கான இளஞ்சிவப்பு நிற தொப்பியுடன் ரூ.15 லட்சம் பரிசை, பெங்களூர் வீரர் கோலி (741 ரன்கள்) கைப்பற்றினார்.
- அதிகப்படியான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரருக்கான ஊதா நிற தொப்பியுடன், ரூ.15 லட்சம் பரிசை பஞ்சாப் வீரர் ஹர்ஷல் படேல் (24 விக்கெட்டுகள்) கைப்பற்றினார்
- தொடரின் சிறந்த வளர்ந்து வரும் வீரர் என தேர்வு செய்யப்பட்ட, ஐதராபாத்தின் நிதிஷ் குமார் ரெட்டிக்கு ரூ.20 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது
- தொடரின் மிகுந்த மதிப்புமிக்க வீரர் என தேர்வு செய்யப்பட்ட, கொல்கத்தாவின் சுனில் நரைனுக்கு ரூ.12 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது
- சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி சீசன் விருதை பெற்ற ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ரூ.15 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது
- கேம் சேஞ்சர் ஆஃப் தி சீசன் விருதை வென்ற சுனில் நரைனுக்கு ரூ.12 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது
- அல்டிமேட் ஃபேண்டஸி விருதையும் சுனில் நரைன் வென்றார்
- அதிக சிக்ஸர்கள்: அபிஷேக் சர்மா (42)- சன்ரைசர்ஸ் ஐதராபாத்
- அதிக பவுண்டரிகள்: டிராவிஸ் ஹெட் (64)- சன்ரைசர்ஸ் ஐதராபாத்
- இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன்: 3 ஓவரில் மிட்செல் ஸ்டார்க் (2/14)
- சிறந்த மைதானம்: ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம்
- சீசனின் சிறந்த கேட்ச்: ரமன்தீப் சிங்
- ஃபேர் பிளே விருது: சன்ரைசர்ஸ் ஐதராபாத்
ஐபிஎல் வரலாற்றில் இரண்டு முறை ஆரஞ்சு தொப்பியை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டும் கோலி ஆரஞ்சு தொப்பியை வென்றது குறிப்பிடத்தக்கது.