மேலும் அறிய

First Ball Wicket: போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்.. சாதனை படைத்த துஷார் தேஷ்பாண்டே.. வேதனையில் பிலிப் சால்ட்!

பிலிப் சால்ட், பார்த்திவ் படேல், காலிஸ், மெக்கல்லம், மயங்க் யாதவ் மற்றும் கோலி ஆகியோர் ஆட்டத்தின் முதல் பந்திலேயே தலா இரண்டு முறை ஆட்டமிழந்தனர்.

ஐபிஎல் 2024ன் 22வது போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் சென்னை வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே சரித்திரம் படைத்தார். துஷார் தேஷ்பாண்டே வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே கொல்கத்தா வீரர் பிலிப் சால்ட் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

இதன்மூலம் ஐபிஎல் போட்டியின் முதல் பந்திலேயே அவுட்டான 25வது வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார் பிலிப் சால்ட். இவருக்கு முன், பார்த்திவ் படேல், கவுதம் கம்பீர், ஜாக் காலிஸ், பிரெண்டன் மெக்கல்லம், சுப்ரமணியம் பத்ரிநாத், சனத் ஜெயசூர்யா, மனோஜ் திவாரி, மைக்கெல் லம்ப், மயங்க் அகர்வால், எஸ். அனிருதா, உன்முக்த் சந்த், குசல் பெரேரா, டுவைன் ஸ்மித், கிறிஸ் கெய்ல், ஷிகர் தவான், ஜோ டென்லி, பிரித்வி ஷா, மார்கஸ் ஸ்டோனிஸ், கே.எல்.ராகுல், விராட் கோலி, டேவிட் வார்னர், பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தனர். 

போட்டியின் முதல் பந்திலேயே பிலிப் சால்ட் ஆட்டமிழப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, கடந்த 2023ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமது ஷமி போட்டியின் முதல் பந்திலேயே பிலிப் சால்டை அவுட்டாகினார். அப்போது, பிலிப் சால்ட்  டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடினார். 

இதையடுத்து பிலிப் சால்ட், பார்த்திவ் படேல், காலிஸ், மெக்கல்லம், மயங்க் யாதவ் மற்றும் கோலி ஆகியோர் ஆட்டத்தின் முதல் பந்திலேயே தலா இரண்டு முறை ஆட்டமிழந்தனர். மேலும், போட்டியின் முதல் பந்திலேயே அவுட்டான கொல்கத்தா அணியின் ஐந்தாவது வீரர் என்ற பெருமையை சால்ட் பெற்றார். இதற்கு முன், 2009ல் மெக்கலம், 2010ல் மனோஜ் திவாரி, 2014ல் காலிஸ், 2019ல் ஜோ டென்லி ஆகியோரும் இந்த தேவையற்ற சாதனையை படைத்துள்ளனர். 

துஷார் தேஷ்பாண்டே சாதனை: 

ஐபிஎல் வரலாற்றில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய உலகின் 24வது வீரர் என்ற சாதனை படைத்தார்.  அதேநேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த சாதனையை படைத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் துஷார் தேஷ்பாண்டே. இவருக்கு முன், லட்சுமிபதி பாலாஜி 2009லும், தீபக் சாஹர் 2018லும் இந்த சாதனையை படைத்திருந்தனர். அதே சமயம் ஐபிஎல் தொடரில் டர்க் நன்னஸ், மலிங்கா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், டிரெண்ட் போல்ட் போன்ற பந்துவீச்சாளர்கள் போட்டியின் முதல் பந்திலேயே இரண்டு முறை விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். அதேசமயம், முகமது ஷமி இதை அதிகபட்சமாக முதல் பந்தில் மூன்று முறை விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 

முதல் பந்தில் விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியல்: 

பேட்ஸ்மேன் விளையாடிய அணி ஆண்டு எதிரணி பந்துவீச்சாளர்
பார்த்தீவ் படேல் சிஎஸ்கே 2008 ஆர்.ஆர் சோஹைல் தன்வீர்
கௌதம் கம்பீர் டிசி 2009 சிஎஸ்கே லட்சுமிபதி பாலாஜி
ஜாக் காலிஸ் ஆர்சிபி 2009 டிசி டிர்க் நன்ஸ்
பிரண்டன் மெக்கல்லம் கே.கே.ஆர் 2009 ஆர்சிபி கெவின் பீட்டர்சன்
எஸ் பத்ரிநாத் சிஎஸ்கே 2009 பி.கே.எஸ் இர்பான் பதான்
சனத் ஜெயசூரிய எம்.ஐ 2009 டிசி டிர்க் நன்ஸ்
மனோஜ் திவாரி கே.கே.ஆர் 2010 டெக்கான் வௌவால் வாசனை
மைக்கேல் ஆட்டுக்குட்டி ஆர்.ஆர் 2010 கே.கே.ஆர் அசோக் திண்டா
மயங்க் அகர்வால் ஆர்சிபி 2011 எம்.ஐ லசித் மலிங்கா
எஸ் அனிருத் சிஎஸ்கே 2011 பி.கே.எஸ் பிரவீன் குமார்
பிரண்டன் மெக்கல்லம் கே.டி.கே 2011 பி.டபிள்யூ. ஐ அல்போன்சா தாமஸ்
பார்த்தீவ் படேல் டெக்கான் 2012 பி.டபிள்யூ. ஐ மார்லன் சாமுவேல்ஸ்
உன்முக்த் சந்த் டிசி 2013 ஜிடி பிரட் லீ
குசல் பெரேரா ஆர்.ஆர் 2013 பி.டபிள்யூ. ஐ புவனேஷ்வர் குமார்
ஜாக் காலிஸ் கே.கே.ஆர் 2014 டிசி முகமது ஷமி
இவான் ஸ்மித் சிஎஸ்கே 2015 கே.கே.ஆர் பாட் கம்மின்ஸ்
மயங்க் அகர்வால் டிசி 2015 எம்.ஐ லசித் மலிங்கா
கிறிஸ் கெய்ல் ஆர்சிபி 2017 கே.கே.ஆர் உமேஷ் யாதவ்
மார்ட்டின் கப்டில் பி.கே.எஸ் 2017 ஆர்.பி.எஸ்.ஜி ஜெய்தேவ் உனத்கட்
சூர்யகுமார் யாதவ் எம்.ஐ 2018 ஆர்சிபி உமேஷ் யாதவ்
ஷிகர் தவான் எஸ்.ஆர்.ஹெச் 2018 சிஎஸ்கே தீபக் சாஹர்
ஜோ டான்லி கே.கே.ஆர் 2019 டிசி இஷாந்த் சர்மா
பிருத்வி ஷா டிசி 2020 ஆர்.ஆர் ஜோஃப்ரா வில்லாளி
மார்கஸ் ஸ்டெய்னிஸ் டிசி 2020 எம்.ஐ ட்ரெண்ட் போல்ட்
கே எல் ராகுல் எல்.எஸ்.ஜி 2022 ஜிடி முகமது ஷமி
விராட் கோலி ஆர்சிபி 2022 எஸ்.ஆர்.ஹெச் ஜெகதீஷ் சுசித்
டேவிட் எச்சரிக்கை டிசி 2022 பி.கே.எஸ் லியாம் லிவிங்ஸ்டோன்
பிரப்சிம்ரன் சிங் பி.கே.எஸ் 2023 எஸ்.ஆர்.ஹெச் புவனேஷ்வர் குமார்
விராட் கோலி ஆர்சிபி 2023 ஆர்.ஆர் ட்ரெண்ட் போல்ட்
பிலிப் உப்பு டிசி 2023 ஜிடி முகமது ஷமி
பிலிப் உப்பு கே.கே.ஆர் 2024 சிஎஸ்கே துஷார் தேஷ்பாண்டே
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget