IPL Records: சாதனைகளும், சறுக்கல்களும்..! ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை நடந்தது என்ன? விரிவாக ஓர் அலசல்..!
ஐபிஎல் வரலாற்றில் பங்கேற்றுள்ள அணிகள் படைத்துள்ள சாதனைகள் மற்றும் சறுக்கல்கள் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் வரலாற்றில் பங்கேற்றுள்ள அணிகள் படைத்துள்ள சாதனைகள் மற்றும் சறுக்கல்கள் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் வரலாறு :
கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல். தொடரில் இதுவரை 15 சீசன்களில் 951 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் அடங்கிய, சராசரியாக 8 முதல் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. அதில், ஒவ்வொரு அணியும் பல்வேறு தகர்க்க முடியாத சாதனைகளையும், பல மோசமான சாதனைகளையும் படைத்துள்ளன. அந்த சாதனை பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது.
அதிக முறை கோப்பை வென்ற அணி:
மும்பை இந்தியன்ஸ் - 5 முறை
சென்னை சூப்பர் கிங்ஸ் - 4 முறை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 2 முறை
அதிக போட்டிகளில் விளையாடிய அணி:
மும்பை இந்தியன்ஸ் - 230 போட்டிகள்
பெங்களூரு - 225
கொல்கத்தா, டெல்லி - 224
அதிக போட்டிகளில் வென்ற அணி:
மும்பை இந்தியன்ஸ் - 130
சென்னை சூப்பர் கிங்ஸ் - 121
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 114
ரன் அடிப்படையில் பெரிய வெற்றி:
அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக, கடந்த 2017ம் ஆண்டு டெல்லி அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது கருதப்படுகிறது.
பந்துகள் மீதமிருந்ததன் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றி
கடந்த 2008ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், 87 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
விக்கெட்ஸ் அடிப்படையில் பெரிய வெற்றி:
கடந்த 2008ம் ஆண்டு மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், டெல்லி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
நெருக்கமான வெற்றி:
கடந்த 2008ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஒரு அணி தோல்வியை தழுவியது இதுவே முதல்முறையாகும்.
கடைசி பந்தில் வெற்றி:
கடந்த 2008ம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் இலக்கை எட்டி சென்னை அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் கடைசி பந்தில் ஒரு அணி வெற்றி பெற்றது இதுவே முதல்முறையாகும்.
அதிகபட்ச சேஸிங்:
கடந்த 2020ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 224 ரன்கள் என்ற கடினமான இலக்கை எட்டி, ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இது ஐபிஎல் வரலாற்றிலேயே வெற்றிகரமாக எட்டப்பட்ட அதிகபட்ச இலக்கு ஆகும்.
குறைந்தபட்ச இலக்கை எட்டாத அணி:
சென்னை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 117 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி வெறும் 92 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் குறைந்தபட்ச இலக்கை கொண்டு வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை சென்னை அணி தனதாக்கியுள்ளது.
அணியின் அதிகபட்ச ரன்:
ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆக, புனே அணிக்கு எதிராக பெங்களூரு அணி 263 ரன்களை எடுத்துள்ளது.
அனியின் குறைந்தபட்ச ரன்:
ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் ஆக, கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூரு அணி 49 ரன்களை எடுத்துள்ளது.
அதிக ரன்கள் அடித்த வீரர்:
1. விராட் கோலி - 6,624 ரன்கள்
2. ஷிகர் தவான் -6,244 ரன்கள்
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்:
1. கிறிஸ் கெயில் - 175 ரன்கள்
2. பிரெண்டன் மெக்கல்லம் - 158 ரன்கள்
அதிக அரைசதங்கள்:
1. டேவிட் வார்னர் - 55 அரைசதங்கள்
2. ஷிகர் தவான் - 47 அரைசதங்கள்
3. விராட் கோலி - 44 அரைசதங்கள்
வேகமான அரைசதங்கள்:
2018ம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கே.எல். ராகுல் 14 பந்துகளில் அரைசதம் விளாசினார். இது ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அடிகக்ப்பட்ட அரைசதம் ஆகும். அந்த சாதனையை 2022ம் ஆண்டு மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கம்மின்ஸ் சமன் செய்தார்.
அதிக சதங்கள்:
1. கெயில் - 6
2. கோலி, பட்லர் - 5
3. ராகுல், வாட்சன், வார்னர் - 4
அதிவேக சதங்கள்:
1. கெயில் - 30 பந்துகள்
2. யூசப் பதான் - 37 பந்துகள்
அதிக சிக்சர்கள்:
1. கெயில் - 357 சிக்சர்கள்
2. டிவில்லியர்ஸ் - 251
அதிக பவுண்டரிகள்:
1. ஷிகர் தவான் - 701
2. விராட் கோலி 578
அதிகமுறை டக்-அவுட்
மந்தீப் சிங், ரோகித் சர்மா - 14 முறை
அதிக விக்கெட்
1. பிராவோ - 183
2. மலிங்கா - 170
அதிக மெய்டன் ஒவர்
1. பிரவீன் குமார் - 14 முறை
2. புவனேஷ்வர் குமார் - 11 முறை
3. இர்பான் பதான் - 10 முறை
அதிக டாட் பால் வீசிய வீரர்கள்
1. புவனேஷ்வர் குமார் - 1,406 பந்துகள்
2. சுனில் நரைன் - 1391 பந்துகள்
3. அஷ்வின் - 1,387
அதிக ஸ்டம்பிங்:
தோனி - 39
அதிக கேட்ச்கள்:
சுரேஷ் ரெய்னா - 109
கேப்டன் ஆக அதிக ரன்கள்:
1. கோலி - 4,881 ரன்கள்
அதிக ஆட்டநாயகன்:
டிவில்லியர்ஸ் - 25 முறை