மேலும் அறிய

SRH vs RR, Match Highlight: பேட்டிங்கில் மிரட்டல்.. பந்துவீச்சில் அசத்தல்..ஐதராபாத்தை சுருட்டி ராஜஸ்தான் அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில்  72 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் அந்த அணி ரன் ரேட் அடிப்படையில் முதலிடம் பிடித்துள்ளது.

ஆரம்பமே சொதப்பிய ஐதராபாத்:

204 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு, ஆரம்பமே பெரும் சறுக்கலாக அமைந்தது. ராஜஸ்தான் அணியின் டிரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் மூன்று மற்றும் ஐந்தாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமலேயே அபிஷேக் சர்மா மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், முதல் ஓவரின் முடிவிலேயே ஒரு ரன் கூட எடுக்காமல் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. 

அடுத்தடுத்து விக்கெட் சரிவு:

முதல் விக்கெட்டில் சரிந்த ஐதராபாத் அணி அதன்பிறகு மீண்டு வரவே இல்லை. ஹாரி ப்ரூக், வாஷின்ஹ்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், அடில் ரஷித் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஓரளவுக்கு தாக்குப்பிடித்த மயங்க் அகர்வால், 23 பந்துகளில் 27 ரன்களை சேர்த்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 131 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அந்த அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாஹல், அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸ் விவரம்:

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் ஹைதரபாத் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.  20 பந்துகளில் அரைசதம் விளாசிய பட்லர் 22 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். பட்லர் மட்டும் 7 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசினார்.  அதன் பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாட 8 ஓவர்களில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 105 ரன்கள் குவித்தது. நிலையான ஆட்டத்தினை ஆடி வந்த தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் தனது அரைசத்தினை கடந்து அசத்தினார்.17வது ஓவரின் முதல் பந்தில் நடராஜன் விக்கெட் வீழ்த்த, அதன் பின்னர் ஹெட்மயர் களத்துக்கு வந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 170ஆக இருந்தது. இதற்கிடையில் சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்த சீசனில் 200 ரன்களைக் கடந்த முதல் அணி என்ற பெருமையை ராஜஸ்தான அணி பெற்றது. ஐதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக ஃபரூகி மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: எம்.பி. ஆகும் அண்ணாமலை? இறங்கி வந்த சந்திரபாபு நாயுடு- பாஜக பக்கா ஸ்கெட்ச்!
Annamalai: எம்.பி. ஆகும் அண்ணாமலை? இறங்கி வந்த சந்திரபாபு நாயுடு- பாஜக பக்கா ஸ்கெட்ச்!
UPSC Topper: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; முதலிடம் பிடித்த சக்தி துபே- யார் இந்தப் பெண்?
UPSC Topper: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; முதலிடம் பிடித்த சக்தி துபே- யார் இந்தப் பெண்?
Gold ATM: வேற லெவல் யா நீங்க.. வந்துருச்சு தங்க ஏடிஎம்.. எங்க தெரியுமா.?
வேற லெவல் யா நீங்க.. வந்துருச்சு தங்க ஏடிஎம்.. எங்க தெரியுமா.?
TN Cabinet Reshuffle : “ரிப்போர்ட் ரெடி – எச்சரித்த முதல்வர்” விரைவில் அமைச்சரவை மாற்றம்..!
”சட்டப்பேரவை முடிந்ததும் அமைச்சரவை மாற்றம்” கலக்கத்தில் அமைச்சர்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நான் இப்படி தான் நடிப்பேன்” சிம்ரன் Vs ஜோதிகா?பற்றி எரியும் புது பஞ்சாயத்து | Simran Vs JyotikaAnnamalai: MP ஆகும் அண்ணாமலை இறங்கி வந்த சந்திரபாபு! பாஜக பக்கா ஸ்கெட்ச்! | BJP | Chandrababu Naidu”அவன கஷ்டப்படுத்தாதீங்க”ஸ்ரீயை மீட்ட லோகேஷ்..மருத்துவர்கள் சொல்வது என்ன? | Sri Bluetick | Lokesh KangarajYogi Adityanath Vs Modi: பிரதமராகும் யோகி ஆதித்யநாத்?மோடிக்கு செக் வைக்கும் RSS பக்கா ப்ளான் | BJP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: எம்.பி. ஆகும் அண்ணாமலை? இறங்கி வந்த சந்திரபாபு நாயுடு- பாஜக பக்கா ஸ்கெட்ச்!
Annamalai: எம்.பி. ஆகும் அண்ணாமலை? இறங்கி வந்த சந்திரபாபு நாயுடு- பாஜக பக்கா ஸ்கெட்ச்!
UPSC Topper: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; முதலிடம் பிடித்த சக்தி துபே- யார் இந்தப் பெண்?
UPSC Topper: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; முதலிடம் பிடித்த சக்தி துபே- யார் இந்தப் பெண்?
Gold ATM: வேற லெவல் யா நீங்க.. வந்துருச்சு தங்க ஏடிஎம்.. எங்க தெரியுமா.?
வேற லெவல் யா நீங்க.. வந்துருச்சு தங்க ஏடிஎம்.. எங்க தெரியுமா.?
TN Cabinet Reshuffle : “ரிப்போர்ட் ரெடி – எச்சரித்த முதல்வர்” விரைவில் அமைச்சரவை மாற்றம்..!
”சட்டப்பேரவை முடிந்ததும் அமைச்சரவை மாற்றம்” கலக்கத்தில் அமைச்சர்கள்..!
அஜித் பிறந்தநாளில் வெளியாகும் வீரம்...தீரா கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்
அஜித் பிறந்தநாளில் வெளியாகும் வீரம்...தீரா கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்
Justice Gavai: ஏற்கனவே குற்றச்சாட்டு இருக்கு.. நீங்க வேற மாட்டி விடுறீங்களா.? நீதிபதி கவாய் கூறியது என்ன.?
ஏற்கனவே குற்றச்சாட்டு இருக்கு.. நீங்க வேற மாட்டி விடுறீங்களா.? நீதிபதி கவாய் கூறியது என்ன.?
பாஜக கூட்டணி களேபரத்துக்கிடையே வரும் 25-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...
பாஜக கூட்டணி களேபரத்துக்கிடையே வரும் 25-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...
Tasmac Sale: ஆறாய் ஓடும் சரக்கு..! ரூ.48, 344 கோடிக்கு மது விற்பனை - கல்லா கட்டும் டாஸ்மாக், கதறும் தாய்மார்கள்
Tasmac Sale: ஆறாய் ஓடும் சரக்கு..! ரூ.48, 344 கோடிக்கு மது விற்பனை - கல்லா கட்டும் டாஸ்மாக், கதறும் தாய்மார்கள்
Embed widget