CSK vs RR: ’பேட்டிங்தான் வேணும்..’ டாஸ் வென்று வாங்கி கொண்ட சாம்சன்.. இரு அணியில் யார் மாற்றம்?
ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசுகிறது
ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசுகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
🚨 Toss Update 🚨@rajasthanroyals win the toss and elect to bat first against @ChennaiIPL.
— IndianPremierLeague (@IPL) April 27, 2023
Follow the match ▶️ https://t.co/wKHNy124q1 #TATAIPL | #RRvCSK pic.twitter.com/cOrRDDSaEb
இரு அணிகளின் லெவன்ஸ் இங்கே பார்க்கலாம்:
ராஜஸ்தான் ராயல்ஸ் - ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஜெம்பா, யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் சர்மா.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மதிஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் திக்ஷ்னா, ஆகாஷ் சிங்.
இரு அணிகள் மோதும் இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 48 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன, இதில் இலக்கை துரத்திய அணி 32 முறை வெற்றி பெற்றுள்ளதுடன், 16 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இருப்பினும், இந்த சீசனில் இதுவரை இங்கு விளையாடிய ஒரு போட்டியில், லக்னோ அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.
ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இதுவரை 27 முறை மோதியுள்ளன, இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 முறையும், ராஜஸ்தான் அணி 12 முறையும் வென்றுள்ளது.