RCB vs KKR IPL 2023: பெங்களூருவின் அதிரடி ஆட்டத்தை தடுக்குமா கொல்கத்தா?.. பிளேயிங் லெவன் விவரம்
RCB vs KKR IPL 2023 பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் வீரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
RCB vs KKR IPL 2023 பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதோடு இரு அணிகளும் இந்த போட்டிக்கான தங்களது இம்பேக்ட் வீரர்களின் பட்டியலையும் அறிவித்துள்ளன.
பெங்களூரு - கொல்கத்தா மோதல்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசை தேர்வு செய்துள்ளது. தொடரின் முதல் போட்டியில் மும்பையை எதிர்கொண்ட பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியோ பஞ்சாப் அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி தோல்வியை கண்டது. இதையடுத்து, வெற்றிப்பயணத்தை தொடர பெங்களூரு அணியும், புள்ளிக்கணக்கை தொடங்க கொல்கத்தா அணியும் முனைப்பு காட்டி வருகின்றன. இதனால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுவது உள்ளூர் அணியான கொல்கத்தாவிற்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு பிளேயிங் லெவன்:
டூப்ளெசிஸ், விராட் கோலி , மைக்கேல் பிரேஸ்வெல் , கிளென் மேக்ஸ்வெல் , DJ வில்லி , சபாஷ் அகமது , தினேஷ் கார்த்திக்( விக்கெட் கீப்பர்) , ஆகாஷ் தீப் , முகமது சிராஜ் , ஹர்ஷல் படேல் , கரண் சர்மா
பெங்களூரு இம்பேக்ட் பிளேயர்ஸ்:
பின் ஆலன், சோனு யாதவ், மஹிபால் லோம்ரோர், சுயாஷ் பிரபுதேசாய் மற்றும் அனுஜ் ராவத்
கொல்கத்தா பிளேயிங் லெவன்:
மந்தீப் சிங், என் ராணா (கேப்டன்) , ஆர் சிங், ஆண்ட்ரூ ரஸ்ஸல் , சுனில் நரைன் , எஸ் ஷர்மா, ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்) , ஷர்துல் தாக்கூர் , டிம் சவுத்தி , வருண் சக்ரவர்த்தி , உமேஷ் யாதவ்
கொல்கத்தா இம்பேக்ட் பிளேயர்ஸ்:
சுயாஷ் சர்மா, வைபவ் அரோரா, என் ஜெகதீசன், டேவிட் வீஸ்
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் கடந்த 15 சீசன்களாக விளையாடி வரும் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 16 முறையும், பெங்களூரு அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
சாதனை படைப்பரா கோலி?
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் களமிறங்குவது பெங்களூரு அணிக்காக கோலி விளையாடும் 225வது போட்டியாகும், ஈடர் கார்டன் மைதானத்தில் இதுவரை 471 ரன்களை எடுத்துள்ள கோலிக்கு, 500 ரன்களை பூர்த்தி செய்ய இன்னும் 29 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இன்றைய போட்டியில் 92 ரன்களை சேர்த்தால் டி-20 போட்டிகளில் 11,500 ரன்களை பூர்த்தி செய்வார்.