Ravichandran Ashwin Fined: சேப்பாக்கத்தில் கெத்து காட்டிய அஸ்வின்.. அபராதத்தை கட்டு என அதிர்ச்சி கொடுத்த ஐபிஎல் நிர்வாகம்..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் நடுவர்களின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் நடுவர்களின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற 17வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணி சார்பில் அதிகப்பட்சமாக பட்லர் 52, படிக்கல் 38, ஹிட்மயர் 30 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து பேட் செய்த சென்னை அணியில் டெவன் கான்வே 50, தோனி 32, ரஹானே 31 ரன்களை எடுத்தாலும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
இதன்மூலம் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. ராஜஸ்தான் அணி தரப்பில் களமிறங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங்கில் 30 ரன்களையும், பவுலிங்கில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அதேசமயம் சென்னை மைதானத்தில் இரண்டாவது இன்னிங்ஸின் போது பனியின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், நடுவர்கள் பந்தை மாற்றினர்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அஸ்வின், அதிக பனி காரணமாக நடுவர்கள் தாங்களாகவே பந்தை மாற்றுவதை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று கூறியுள்ளார். அப்படி மாற்றியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
இந்த ஆண்டு ஐபிஎல் களத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் என்னை கொஞ்சம் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பந்துவீச்சு அணியாக, பந்தை மாற்றுமாறு நாங்கள் கேட்கவில்லை. ஆனால் நடுவர்களின் பரிந்துரையின் பேரில் பந்து மாற்றப்பட்டது. நான் இதுபற்றி நடுவரிடம் கேட்டேன். அவரோ பந்தை மாற்றலாம் என பதிலளித்தார். இதனைப் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் பனியின் தாக்கம் இருக்கும் போது இந்த ஐபிஎல் தொடரில் பந்தை மாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்.
இதனையடுத்து ஐபிஎல் நடத்தை விதி 2.7ன் படி நடுவர்களின் முடிவு குறித்து கருத்து தெரிவித்ததற்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Samson On Dhoni: தோனின்னு பேர் சொல்லணுமா?.. அவர் இருந்தா எதுவுமே வேலைக்கு ஆகாது - சஞ்சு சாம்சன்