மேலும் அறிய

RR vs PBKS: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் இன்று மோதல் .. இரண்டாவது வெற்றி யாருக்கு? - வாங்க பார்க்கலாம்..!

16வது ஐபிஎல் சீசன்  கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. 3 ஆண்டுகளுக்குப் பின் தங்கள் அணி உள்ளூர் மைதானத்தில் விளையாடி வருவதால் ரசிகர்கள் ஆர்வமுடன் ஐபிஎல் போட்டிகளை கண்டுகளித்து வருகின்றனர்.

16வது ஐபிஎல் சீசனில் இன்று நடக்கும் 8வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றது.

16வது ஐபிஎல் சீசன்  கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. 3 ஆண்டுகளுக்குப் பின் தங்கள் அணி உள்ளூர் மைதானத்தில் விளையாடி வருவதால் ரசிகர்கள் ஆர்வமுடன் ஐபிஎல் போட்டிகளை கண்டுகளித்து வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை,கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத், லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளது. 

இதில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது அசாம் மாநிலம் கௌகாத்தியில் நடைபெறுகிறது. கௌகாத்தி இரு அணிகளுக்குமே உள்ளூர் மைதானம் இல்லை என்ற போதிலும், இது ராஜஸ்தான் அணிக்கான ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது. 

இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை

ராஜஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணியில் ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து அந்த ஆட்டத்தில் பந்துவீச்சிலும் ராஜஸ்தான் அணி மிரட்டியது. இது இன்றைய ஆட்டத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பஞ்சாப் அணியை பொறுத்தவரை தனது முதல் ஆட்டத்தில் டக் வொர்த் லூயிஸ் முறையில் கொல்கத்தா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணி பேட்டிங்கில் வலுவாக இருந்தாலும், சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்த போட்டியில் வெற்றி நிச்சயம். இந்த 2 அணிகளும் தங்களது 2வது வெற்றியை நோக்கி நகரும் என்பதால் இப்போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

அணியில் இடம் பெறும் வீரர்கள் விவரம் (உத்தேச பட்டியல்) 

ராஜஸ்தான் அணி: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ஆர் அஷ்வின், டிரென்ட் போல்ட், கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்.

பஞ்சாப் அணி: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான், சாம் கரண், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், ரபாடா, அர்ஷ்தீப் சிங்.

மைதானம் எப்படி? 

கௌகாத்தி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக திகழும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை ஐபிஎல் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.  இதுவரை இம்மைதானத்தில் 3 ஒருநாள் போட்டிகளும், 6 டி20 போட்டிகளும் நடைபெற்றுள்ளது. இதில் முதலில் பேட் செய்த அணியே அதிகமுறை வெற்றி பெற்றுள்ளது 

தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் வீரர் (impact Player) யார்? 

ராஜஸ்தான் அணியில் துருவ் ஜூரல், சந்தீப் ஷர்மா, குல்தீப் சென், முருகன் அஷ்வின் மற்றும் டோனோவன் ஃபெரீரா ஆகிய வீரர்களும், பஞ்சாப் அணியில் ரிஷி தவான், ஹர்ப்ரீத் சிங், மோஹித் ரதீ, அதர்வா டைடே மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் இடம் பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget