மேலும் அறிய

IPL 2023: எங்க ஊரு சென்னைக்கு... பிராவோவிற்கு விசில் அடிக்க கற்றுக்கொடுத்த தோனி- வைரலாகும் வீடியோ!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் இன்னும் இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. ஐ.பி.எல். திருவிழாவிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி, ஆல்ரவுண்டர் ட்வைன் பிராவோவிற்கு விசில் அடிக்க கற்றுக்கொடுக்கும் வீடியோவை சி.எஸ்.கே. தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. க்யூட்டான இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது. 

கோடை காலம் என்றதும் தர்பூசணி, மாம்பழம், விடுமுறை என இவற்றோடு ஐ.பி.எல். திருவிழா கொண்டாட்டமும் நினைவுக்கு வரும்.இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் இம்மாத இறுதியில் 31-ஆம் தேதி தொடங்குகிறது. ரசிகர்கள் இதற்காக காத்திருகின்றனர். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன், இந்திய அணியின் முன்னாள் வீரர், கூல் கேப்டன் இப்படி ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனி சென்னை வந்த புகைப்படங்களை அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் வெளியிட்டன. ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 

IPL 2023: எங்க ஊரு சென்னைக்கு... பிராவோவிற்கு விசில் அடிக்க கற்றுக்கொடுத்த தோனி- வைரலாகும் வீடியோ!

ஐ.பி.எல். போட்டிகளில் வெவ்வேறு அணிகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஓர் அணியில் விளையாடுவதை காண்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். கிரிக்கெட் வீரர்கள் நட்பு பாராட்டுவதும் மிகவும் அழகாக இருக்கும். அணியினர் பயிற்சி மேற்கொளவதையும், அவர்கள் அழகான தருணங்களின் வீடியோக்களையும் அணி நிர்வாகம் அவ்வபோது வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், பிராவோவிற்கு தோனி விசில் அடிக்க கற்றுக்கொடுக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

தல தோனி

மே 2022 இல் தனது கடைசி போட்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடியதிலிருந்து 'தல' தோனி 10 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்புகிறார். ஐபிஎல்-இல் மிகவும் விரும்பப்படும் அணியாக உள்ள 'எல்லோ ஆர்மி' கடந்த ஆண்டு அந்த அளவுக்கு சிறப்பாக செயல்படாததால், இம்முறை  பிளே-ஆஃப் சுற்றுக்குள் செல்ல வேண்டும், கோப்பை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

எம்.எஸ்.தோனி - ட்வைன் பிராவோ 

எம்.எஸ்.தோனி - ட்வைன் பிராவோ இருவருக்கும் இடையே அழகான நட்பு தொடர்ந்து வருகிறது. ‘எங்க ஊரு சென்னைக்கு,, பெரிய விசிலு அடிங்க.... எங்க தல தோனிக்கு பெரிய விசுலு அடிங்க..” என்ற பாடலுடன் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், விசில் அடிக்க வராத பிராவோவிற்கு, தோனி கற்றுக்கொடுக்கிறார். விசில் அடிப்பது எப்படி என்று சொல்லித் தரும் வீடியோ வைரல் ஆகிவருகிறது. ரசிகர்கள் க்யூட்டான தருணம் என்று கமெண்ட் செய்து வருகின்றன.

இந்தாண்டு தோனி எட்டவிருக்கும் மைல்கல்:

எம்.எஸ்.தோனி இதுவரை ஐபிஎல் தொடரில் 234 போட்டிகளில் விளையாடி 4,978 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆண்டு 22 ரன்கள் எடுத்து 5,000 ரன்களை கடந்தால் ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 7வது வீரர் என்ற பெருமையை தோனி படைப்பார். 

ஐபிஎல் 2023க்கான சிஎஸ்கே அணி: 

எம்எஸ் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் பதேஷ்பான், துஷார் பதாஷ்பான் , சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
லாஸ் ஏஞ்சல்சில் 8,000 ஏக்கரில் பற்றிய புதிய தீ: தவிக்கும் 31,000 பேர்..ரூ.3 லட்சம் கோடி சேதம்.!
லாஸ் ஏஞ்சல்சில் 8,000 ஏக்கரில் பற்றிய புதிய தீ: தவிக்கும் 31,000 பேர்..ரூ.3 லட்சம் கோடி சேதம்.!
ஒருபக்கம் நோய் தாக்குதல்... மறுபக்கம் அறுவடை இயந்திர வாடகை உயர்வு: அதிர்ச்சியில் விவசாயிகள்
ஒருபக்கம் நோய் தாக்குதல்... மறுபக்கம் அறுவடை இயந்திர வாடகை உயர்வு: அதிர்ச்சியில் விவசாயிகள்
Vijay's Next Political Move: அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
"பணிந்தது மத்திய அரசு.. என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது" காலரை தூக்கிவிட்ட ஸ்டாலின்!
Embed widget