மேலும் அறிய

IPL 2023 MI vs PBKS LIVE: அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் பஞ்சராகிப் போன மும்பை இந்தியன்ஸ்; பஞ்சாப் அபர வெற்றி..!

IPL 2023 MI vs PBKS LIVE: மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

LIVE

Key Events
IPL 2023 MI vs PBKS LIVE: அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் பஞ்சராகிப் போன மும்பை இந்தியன்ஸ்; பஞ்சாப் அபர வெற்றி..!

Background

ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டிகள் மற்றும் அவற்றின் முடிவுகள் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.  

மும்பை - பஞ்சாப் அணிகள் மோதல்:

வார இறுதியான இன்றைய தினத்தின் இரண்டாவது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். முன்னதாக, ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் மற்றும் அதன் முடிவுகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

நேருக்கு நேர்:

ஐபிஎல் தொடர் அறிமுகமானது முதலே விளையாடி வரும் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள், இதுவரை 29முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 15 முறையும், பஞ்சாப் அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது. வான்கடே மைதானத்தில்  இரு அணிகளுக்கு இடையே மொத்தம் 9 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் மும்பை அணி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5 போட்டிகளில், பஞ்சாப் அணி மூன்றிலும், மும்பை அணி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஸ்கோர் விவரங்கள்:

பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 223

மும்பை அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 230

பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 87

மும்பை அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 119

தனிநபர் சாதனைகள்: (தற்போது அணியில் உள்ள வீரர்களின் அடிப்படையில்)

பஞ்சாபிற்கு எதிராக மும்பைக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர் : ரோகித் சர்மா, 522 ரன்கள்

மும்பைக்கு எதிராக பஞ்சாபிற்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர் : ஷிகர் தவான், 70 ரன்கள்

பஞ்சாபிற்கு எதிராக மும்பைக்காக அதிக விக்கெட் எடுத்த வீரர் : பெஹ்ரண்ட்ரோஃப், 1 விக்கெட்

மும்பைக்கு எதிராக பஞ்சாபிற்காக அதிக விக்கெட் எடுத்த வீரர் : ரிஷி தவான், 3 விக்கெட்கள்

பஞ்சாபிற்கு எதிராக மும்பைக்காக அதிக கேட்ச் பிடித்த வீரர் : சூர்யகுமார் யாதவ், 5 கேட்ச்

மும்பைக்கு எதிராக பஞ்சாபிற்காக அதிக கேட்ச் பிடித்த வீரர் : ஷிகர் தவான், 1 கேட்ச்

நடப்பு தொடரில் இதுவரை:

மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடி, மூன்றில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இதனிடையே, பஞ்சாப் அணியும் நடப்பு தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. 

23:32 PM (IST)  •  22 Apr 2023

IPL 2023 MI vs PBKS Live Score: பஞ்சாப் வெற்றி..!

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.  அந்த ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனால் பஞ்சாப் அணி மும்பை அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

23:04 PM (IST)  •  22 Apr 2023

IPL 2023 MI vs PBKS Live Score: சூர்யகுமார் யாதவ் விக்கெட்..!

அதிரடியாக ஆடி வந்த சூர்யகுமார் யாதவ் 26 பந்தில் 57 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

22:56 PM (IST)  •  22 Apr 2023

IPL 2023 MI vs PBKS Live Score: சூர்யகுமார் யாதவ் அரைசதம்..!

களமிறங்கியது முதல் அதிரடியாக ஆடிவரும் சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் தனது அரைசத்தினை எட்டியுள்ளார். 

22:50 PM (IST)  •  22 Apr 2023

IPL 2023 MI vs PBKS Live Score: கேமரூன் க்ரீன் அவுட்..!

அதிரடியாக ஆடிவந்த கேமரூன் க்ரீன் எல்லீஸ் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். அவர் 43 பந்தில் 67 ரன்கள் சேர்த்தார். 

22:47 PM (IST)  •  22 Apr 2023

IPL 2023 MI vs PBKS Live Score: 15 ஓவர்கள் முடிவில்..!

அதிரடியாக இலக்கை நோக்கி முன்னேறும் மும்பை அணி 15 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் சேர்த்துள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget