மேலும் அறிய

RCB vs KKR IPL 2023: பொளந்து கட்டிய ஷர்துல் தாக்கூர், ரிங்கு சிங்.. பெங்களூரு அணிக்கான இலக்கு இதுதான்?

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 205 ரன்களை கொல்கத்தா அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 205  ரன்களை கொல்கத்தா அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

பெங்களூரு - கொல்கத்தா மோதல்:

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடரின் முதல் போட்டியில் மும்பையை எதிர்கொண்ட பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியோ பஞ்சாப் அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி தோல்வியை கண்டது. இதையடுத்து, வெற்றிப்பயணத்தை தொடர பெங்களூரு அணியும், புள்ளிக்கணக்கை தொடங்க கொல்கத்தா அணியும் முனைப்பு காட்டி இந்த போட்டியில் களமிறங்கின.

ஆரம்பமே சொதப்பல்:
 
கொல்கத்தா அணிக்காக குர்ப்ராஸ் மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நிதானமாக விளையாடிய அந்த ஜோடி 26 ரன்களை சேர்த்தது. டேவிட் வில்லே நான்காவது ஓவரை வீச, அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் வெங்கடேஷ் அய்யர் கிளீன் போல்டானார். இந்த போட்டியில் அவர் வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்தார். அவரை தொடர்ந்து வந்த மந்தீப் சிங்.முதல் பந்திலேயே நடையை கட்டினார். அவரை தொடர்ந்து கேப்டன் நிதிஷ் ராணாவும் வெறும் ஒரு ரன்னில் பிரேஸ்வெல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

மிரட்டிய குர்ப்ராஸ்:

மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்ள் சரிந்தாலும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த குர்ப்ராஸ் பொறுப்புடன் விளையாடி கொல்கத்தாவை சரிவிலிருந்து மீட்டார். 39 பந்தில் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார்.தொடர்ந்து 44 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து இருந்தபோது கரண் சர்மா பந்துவீச்சில் கேட்ச் முறையில் அவுட்டானர். இதில் 6 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்க்ம். அவரை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஸல் டக்-அவுட் ஆனார்.

மிரட்டிய ஷர்தூல் தாக்கூர்

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 89 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.இதையடுத்து 6வது விக்கெட்டிற்கு ரிங்கு சிங்குடன் ஜோடி சேர்ந்த ஷர்துல் தாக்கூர் பெங்க்ளூருவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதரடித்தார். இதனால் வெறும் 20 பந்துகளில் ஷர்தூல் தாக்கூர் அரைசதம் கடந்தார். அவருக்கு உறுதுணையாக ரிங்கு சிங்கும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஷர்தூல் தாக்கூர் - ரிங்கு சிங் ஜோடி, 48 பந்துகளில் 103 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, 46 ரன்களை எடுத்து இருந்தபோது கேட்ச் முறையில் ரிங்கு சிங் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து 29 பந்துகளில் 68 ரன்களை சேர்த்து இருந்தபோது, ஷர்தூல் தாக்கூர் ஆட்டமிழந்தார். இதன் மூலம் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை சேர்த்தது. இந்த இலக்கை பெங்களூரு அணி எட்டுமா என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
SVAMITVA Scheme; சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
SVAMITVA Scheme; சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
TVK Vijay: கோட்டைவிட்ட விஜய் - புலம்பும் தவெக நிர்வாகிகள் - ஈரோடு கிழக்கில் சீமான் அறுவடை பலிக்குமா?
TVK Vijay: கோட்டைவிட்ட விஜய் - புலம்பும் தவெக நிர்வாகிகள் - ஈரோடு கிழக்கில் சீமான் அறுவடை பலிக்குமா?
சென்னை ரிட்டர்ன் வர்றீங்களா? எக்கச்சக்க மாற்றங்கள்! வாகன ஓட்டிகளே உஷார்..!
சென்னை ரிட்டர்ன் வர்றீங்களா? எக்கச்சக்க மாற்றங்கள்! வாகன ஓட்டிகளே உஷார்..!
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி; முதல் பரிசு ரூ.30 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி; முதல் பரிசு ரூ.30 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?
Israel Hamas War: அடடா..! காஸா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்..! என்று முதல் அமல் தெரியுமா?
Israel Hamas War: அடடா..! காஸா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்..! என்று முதல் அமல் தெரியுமா?
Embed widget