மேலும் அறிய

RCB vs CSK, Match Highlights: கிங் கோலி கோட்டையில் கொடி நாட்டிய சி.எஸ்.கே; 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

IPL 2023, RCB vs CSK: பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

IPL 2023 RCB vs CSK:  ஐபிஎல் தொடரில் மிகவும் கவனிக்கப்படும் போட்டிகளில் ஒன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியும் ஒன்று. இம்முறை இரு அணிகளும் வேறு வேறு குழுக்களில் இடம் பெற்றுள்ளதால் ஒரு போட்டி மட்டுமே லீக் சுற்றில் இரு அணிகளும் மோதும். இந்த போட்டி இன்று (ஏப்ரல் 17) பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கியது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளசிஸ் பந்து வீச முடிவு செய்தார். இந்த மைதானத்தில் சேஸ் செய்யும் அணி அதிகம் வெற்றி பெற்றுள்ளதால், பெங்களூரு அணி இந்த முடிவினை எடுத்தது. இதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய சென்னை அணிக்கு மிகவும் சிறிய மைதானமான சின்னச் சாமி மைதானத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்டனர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருத்ராஜ் கெய்வாட் மற்றும் கான்வே செட் ஆவதற்குள் ருத்ராஜ் கெய்க்வாட் 3 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ரஹானே சிறப்பாக ஆட, சென்னை அணியின் ரன் சீராக உயர்ந்தது. 

இருவரும் இணைந்து பவர்ப்ளே முடிவில் 50 ரன்களை கடக்க வைத்தனர். இருவரும் பெங்களூரு அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். ஹரசங்கா வீசிய பந்தை தூக்கி ஆட முயற்சி செய்த ரஹானே க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் வந்த ஷிவம் டூபே ருத்ரதாண்டவ ஆட்டம் ஆட சென்னை அணி 14.3 ஓவர்களில் 154 ரன்களை எட்டியது. களமிறங்கியது முதல் ஆக்ரோஷமானா ஆட்டத்தினை வெளிப்படுத்திய கான்வே அரைசதம் கடந்து சதத்தினை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தார். ஆனால் அவர் 45 பந்தில் 83 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்சல் பட்டேல் பந்து வீச்சில் போல்ட் ஆனார். கான்வே 6 பவுண்டரியும் 6 சிக்ஸரும் விளாசியிருந்தார். 

மறுமுனையில் இருந்த டூபே 25 பந்தில் தனது அரைசத்தினை பூர்த்தி செய்து தனது விக்கெட்டை இழந்தார். களமிறங்கியது முதல் சிக்ஸர்கள் பறக்க விட்ட 2 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசினார். இதில் ஒரு சிக்ஸர் 111 மீட்டருக்கு பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.  அதன் பின்னர் சென்னை அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை எடுத்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில்6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் சேர்த்தது.  

அதன் பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி முதல் ஓவரில் விராட் கோலி தனது விக்கெட்டை இழக்க, அடுத்த ஓவரில் மகிபால் ரோம்ரர் ஆட்டமிழந்தனர். ஆனால் அதன் பின்னர் கைகோர்த்த மேக்ஸ்வெல் மற்றும் டூ பிளசிஸ் சென்னை அணியின் பந்து வீச்சை நொருக்கித் தள்ளினர். இருவரும் அரைசதம் கடந்து ருத்ரதாண்டவமாடினர்.  இதனால் ஸ்கோர் மளமளவென அதிகரித்தது. மேக்ஸ்வெல் 76 ரன்களும் டூ ப்ளசிஸ் 62 ரன்களும் சேர்த்த நிலையில் தங்களது விகெட்டினை இழந்தனர்.  தினேஷ் கார்த்திக் 28 ரன்களில் ஆட்டமிழக்க போட்டியில் பரபபரப்பு தொற்றிக்கொண்டது. இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் முதல் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் முதல் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
Trump Epstein Files: எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
TVK VIJAY: 70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
Embed widget