IPL 2023: ஐபிஎல் தொடரில் அடுத்த இலக்கு கோப்பைதான்... புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்த ஹைதராபாத்!
ஐபிஎல் தொடர் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பிரையன் லாராவை நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடர் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பிரையன் லாராவை நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) வரவிருக்கும் சீசன்களுக்கான புதிய தலைமை பயிற்சியாளராக பிரையன் லாராவை நியமிப்பதாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இன்று தெரிவித்துள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த டாம் மூடியின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை பயிற்சியாளராக லாரா நியமிக்கப்பட்டுள்ளார்.
🚨Announcement 🚨
— SunRisers Hyderabad (@SunRisers) September 3, 2022
The cricketing legend Brian Lara will be our head coach for the upcoming #IPL seasons. 🧡#OrangeArmy pic.twitter.com/6dSV3y2XU2
கடந்த ஐபிஎல் தொடரில் டாம் மூடி தலைமை பயிற்சியின் கீழ் ஹைதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்தது. லாரா கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆலோசகராகவும், பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூடி பயிற்சியின் கீழ் கடந்த 2013 மற்றும் 2019 க்கு இடையில் சன் ஹைதராபாத் அணி ஒரு வெற்றிகரமான அணியாக வலம் வந்தது. மேலும், ஹைதராபாத் அணி ஐந்து முறை பிளேஆஃப்களை சென்றும், 2016 இல் சாம்பியன் பட்டத்தையும் வென்றது.