IPL 2022: களத்தில் ஷமியை திட்டிய ஹர்திக் பாண்ட்யா.. ட்விட்டரில் வறுத்து எடுக்கும் ரசிகர்கள் - வைரல் வீடியோ
குஜராத் லையன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் லையன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய குஜராத் லையன்ஸ் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதன்காரணமாக குஜராத் லையன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 162 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனின் அபார அரைசதத்தால் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடிய போது ஹர்திக் பாண்ட்யா இந்திய வீரர் முகமது ஷமியை திட்டும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அதாவது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சேஸிங் செய்து கொண்டிருந்த போது ஆட்டத்தின் 14ஆவது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். அந்த ஓவரில் ஒரு பந்தை சன்ரைசர்ஸ் வீரர் ராகுல் திரிபாதி தூக்கி அடித்தார். அப்போது அதை பிடிக்க முகமது ஷமி தவறினார். அந்த சமயத்தில் ஹர்திக் பாண்ட்யா ஷமியை திட்டும் காட்சிகள் கேமராவில் பதிவாகியிருந்தது.
C.... @hardikpandya7 U R Only By Mistakely Making GT Captain,Not A Legend Player,Please Respect Senior AND Legend Player @MdShami11 pic.twitter.com/r2XGNFqIq8
— Vicky More(Srk Fan) (@srk_fan_vicky) April 11, 2022
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக வைரலானது. இதை பதிவிட்டு ட்விட்டரில் ரசிகர்கள் பலர் ஹர்திக் பாண்ட்யாவை வறுத்து எடுத்து வருகின்றனர். ஒரு சீனியர் வீரரை எப்படி ஹர்திக் பாண்ட்யா இப்படி திட்டலாம் என்று பலரும் அதில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு கேப்டன் பதவி எப்படி கொடுக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Abusing your own players is not cool hardik Pandya! #SRHvGT #GTvsSRH pic.twitter.com/0DtFKwhVZR
— 👑🔔 (@superking1814) April 11, 2022
Dear Hardik, you are a terrible captain. Stop taking it out on your teammates, particularly someone as senior as Shami. #IPL #IPL2022 #GTvsSRH pic.twitter.com/9yoLpslco7
— Bodhisattva #DalitLivesMatter 🇮🇳🏳️🌈 (@insenroy) April 11, 2022
@hardikpandya7 shouting at the #mohammedshami is disgraceful what Shami has done for #Indianteam is commendable and #Hardik has not even done half of it. #shameful #HardikPandya
— Wolf (@Wolf_Vickbaghel) April 11, 2022
Can’t believe Hardik Pandya just insulted senior player and an Indian legend Mohd. Shami for not taking the risky catch and preferred to save the boundary. Hardik’s temper tantrums during tight situations have been outright cringe. #GTvsSRH #IPL2022 pic.twitter.com/yAyMmFkRwS
— glowred (@glowred) April 11, 2022
இவ்வாறு பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: ரஸல் டூ ஹர்திக் - ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 100 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்