IPL 2022: ஐபிஎல் இறுதிப்போட்டி மும்பையில் இல்லை... பிசிசிஐ புதிய அறிவிப்பு!
இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது
கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்க இருக்கும் இடத்தை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும். கொரோனா பரவல் காரணம் என்பதால் மும்பையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மைதானங்களில் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ப்ளே ஆஃப் சுற்றில் நடைபெற இருக்கும் முதல் இரண்டு போட்டிகளான குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
Qualifier 1 will be held in Eden Gardens, Kolkata on 24th May followed by the Eliminator on 25th May. The Narendra Modi Stadium in Ahmedabad will host Qualifier 2 and the TATA IPL Final on 27th and 29th May respectively.#TATAIPL https://t.co/rhgo8f9cHe
— IndianPremierLeague (@IPL) May 3, 2022
அதனை அடுத்து நடைபெற இருக்கும் குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்க இருப்பதை பிசிசிஐ உறுதிப்படுத்தி இருக்கிறது.
ப்ளே ஆஃப் போட்டிகள் அட்டவணை:
குவாலிஃபையர் 1 - கொல்கத்தா ஈடன் கார்டன் - மே 24ம் தேதி
எலிமினேட்டர் - கொல்கத்தா ஈடன் கார்டன் - மே 25ம் தேதி
குவாலிஃபையர் 2 - அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் - மே 27
இறுதிப்போட்டி - அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் - மே 29
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்