IPL 2022: சச்சின் தேர்வு செய்த 2022 ஐபிஎல் அணி...! விராட், ரோகித் மிஸ்ஸிங்! - முழு விபரம்!
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது ஐபிஎல் 2022 போட்டிக்கான அணியை தேர்வு செய்தார்.
கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்த ஐபிஎல் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இடம்பெறவில்லை.
தனது அணியைத் தேர்ந்தெடுத்து சச்சின் கூறுகையில், “வீரர்களின் நற்பெயருக்கும் அவர்களின் கடந்தகால செயல்பாடுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த சீசனில் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் இந்த சீசனில் அவர்களால் என்ன சாதிக்க முடிந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டது” என்றார்.
ஹர்திக் பாண்டியா கேப்டன்
எதிர்பார்த்தபடி, ஹர்திக் பாண்டியா, ஜோஸ் பட்லர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு அவரது அணியில் இடம் கிடைத்துள்ளது.முதல் தொடரிலேயே கோப்பையை வென்ற பாண்டியாவை தனது அணிக்கு கேப்டனாக நியமித்துள்ளார் சச்சின். “இந்த சீசனில் ஹர்திக் சிறந்த கேப்டனாக இருந்தார். அவர் மனதிலும், செயலிலும் தெளிவாக இருந்தார். வருந்தாதீர்கள், கொண்டாடுங்கள் என்று நான் எப்போதும் கூறுவேன். உங்களால் கொண்டாட முடிந்தால், கேப்டன் எதிரணியை மிஞ்சுகிறார் என்று அர்த்தம், அதைத்தான் ஹர்திக் செய்தார்” என்றார்.
பட்லர், தவான் ஓப்பனிங்
சச்சின், பட்லர் மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தேர்வு செய்தார். பட்லர் 864 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தவானும் 14 போட்டிகளில் 460 ரன்கள் எடுத்துள்ளார். பின்னர் கேஎல் ராகுலை தனது மூன்றாவது நம்பர் ஆக தேர்ந்தெடுத்தார். ராகுல் முதலிடத்தில் பேட்டிங் செய்தாலும், அவர் வழக்கமாக இந்தியாவின் டி20 அணிக்காக மூன்றாவது இடத்தில் பேட் செய்வார். அவர் 15 இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் உட்பட 616 ரன்கள் எடுத்தார். “அவரது நிலைத்தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் சிங்கிள்களை எடுக்கக்கூடிய ஒரு வீரர், அவர் சிக்ஸர்களை அடிக்க விரும்பும் போது அதையும் செய்யக்கூடிய திறமை அவருக்கு உள்ளது” என்று டெண்டுல்கர் கூறினார்.
தினேஷ் கார்த்திக்கு அணியில் இடம்
டேவிட் மில்லரை ஐந்தாவது இடத்தில் எடுப்பதற்கு முன்பு அவர் பாண்டியாவை நான்காவது இடத்தில் வைத்தார். “இடது-வலது சேர்க்கை முக்கியமானது என்பதால் மற்றொரு இடது கை வீரரை இங்கே கொண்டு வருகிறேன். அங்கே பல பெயர்கள் இருந்தன ஆனால் நான் டேவிட் மில்லரை தேர்வு செய்தேன். அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மிகச் சிறந்த நிலைத்தன்மை மற்றும் சில முக்கியமான ஆட்டங்களை விளையாடினார். இந்த சீசனில் நான் கவனித்தது என்னவென்றால், அவரால் மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் அடிக்க முடிந்தது. இது சரியான கிரிக்கெட் ஷாட்கள் மற்றும் இது பார்ப்பதற்கு விருந்தாக இருந்தது” என்று கூறினார்.
ஆறாவது இடத்தில் லியாம் லிவிங்ஸ்டோனைத் தொடர்ந்து ஆர்சிபியின் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். “லிவிங்ஸ்டன் சிக்ஸர் அடிக்கும் திறன் கொண்டவர். ஆபத்தான வீரர். அவர் தனது மனதில் மிகவும் தெளிவாக இருக்கிறார். இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் அசாதாரண நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார். அவர் அமைதியுடனும் இருப்பதை உணர்ந்தேன். அவர் கட்டுப்பாட்டுடன் இருந்தார்” என்று டெண்டுல்கர் கூறினார். ரஷித் கான், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரை தனது முக்கிய பந்துவீச்சாளர்களாக தேர்வு செய்தார்.
தெண்டுல்கர் தேர்வு செய்த ஐபிஎல் லெவன் : ஜோஸ் பட்லர், ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், லியாம் லிவிங்ஸ்டோன், தினேஷ் கார்த்திக், ரஷித் கான், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்