IPL 2022 Retention: குறைந்த காசு... ஆனால் மாஸ் பீசு... ஷேவ் செய்யப்பட்ட இளம் சிங்கங்கள் லிஸ்ட் இது!
IPL 2021 Retained Players List with Low Price: 2022 ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு குறைந்த விலையில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் பின்வருமாறு :
இந்தியாவில் ஆண்டுதோறும் டி20 போட்டிகளுக்கான ஐ.பி.எல். தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும், அடுத்த ஐ.பி.எல். தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் தெரிவித்திருந்தது.
அதன்படி, ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நேற்று அறிவித்தது. இதில், தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒரே அணிக்காக விளையாடிய பல முக்கிய வீரர்கள் அதிரடியாக கழட்டிவிடப் பட்டனர்.
தொடர்ச்சியாக சென்னை அணியில் ஜடேஜா, ரோஹித் சர்மா போன்ற ஒரு சிலர் வீரர்கள் அதிக விலைக்கு அவர்கள் இருந்த அணியில் தக்கவைக்கப்பட்டனர். இவர்களின் வரிசையில் ஒரு சில இளம் வீரர்கள் குறைந்த விலைக்கு தக்கவைக்கப்பட்டு அனைவரும் கவனத்தையும் ஈர்த்தனர்.
அவர்களின் பட்டியல் பின்வருமாறு :
1. ஜெய்ஸ்வால்- 4 கோடி ரூபாய்
Presenting ➡️ The first three Royals of #IPL2022. 👊🏼#RoyalsFamily | @IamSanjuSamson | @josbuttler | @yashasvi_j pic.twitter.com/CrCGqWviwj
— Rajasthan Royals (@rajasthanroyals) November 30, 2021
ராஜஸ்தான் அணியில் விளையாடி வரும் ஜெய்ஸ்வால் கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை. இருந்தபோதிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை 4 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளது. கடந்த 2020 ம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் ஜெய்ஸ்வால் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தை பிடித்து மேன் ஆப் தி சீரிஸை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஹர்ஷதீப் சிங் - 4 கோடி ரூபாய்
ஐபிஎல் 2021 தொடரில் ரூ 20 லட்சம் பெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை ரூ.4 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் தக்க வைத்துக் கொண்டது. பஞ்சாப் அணி தற்போது இரண்டு வீரர்களை மட்டுமே தக்கவைத்து கொண்டுள்ள நிலையில், அதில் ஒருவராக ஹர்ஷதீப் சிங்கிற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
3. அப்துல் சமாத் - 4 கோடி ரூபாய்
கடந்த ஐபிஎல் 2021 தொடரில் ரூ.20 லட்சம் சம்பளமாக பெற்ற அப்துல் சமாத், ஐபிஎல் ஏலத்தில் 2022க்கு முன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடமிருந்து ரூ.4 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிறந்த ஆல்- ரவுண்டராக விளங்கும் அப்துல் சமாத், ஹைதராபாத் அணிக்காக நிச்சயம் முக்கிய நட்சத்திரமாக ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Presenting the 2️⃣ #Risers along with Captain Kane who will continue to don the #SRH colours in #IPL2022 🧡
— SunRisers Hyderabad (@SunRisers) November 30, 2021
We enter the auction with a purse of INR 68 crores. #OrangeArmy pic.twitter.com/2WwRZMUelO
4. உம்ரான் மாலிக்- 4 கோடி ரூபாய்
கடந்த ஐபிஎல் தொடர் 2021 ல் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய உம்ரான் மாலிக் முதல் ஆட்டத்திலேயே 152.95 கி.மீ வேகத்தில் பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறவி்ட்டார். ஐபிஎல் வரலாற்றிலேயே 3 வது அதிகபட்ச வேகப்பந்துவீச்சாக உம்ரான் மாலிக் பந்துவீச்சு அமைந்தது. இதையடுத்து, ஹைதராபாத் அணியினரால் உம்ரான் மாலிக் 4 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: வெறியோடு களம் காணும் வெங்கடேஷ் ஐயர்.. கொல்கத்தா கொலைவெறி பாய்ஸ் இவங்க தான்!