IPL 2022, Playoff Qualifiers: ஆடாம ஜெயிச்சோமடா... மும்பையின் வெற்றியால் ப்ளே ஆஃப் செல்லும் பெங்களூரு!
திலக் வெர்மா, டிம் டேவிட் ஆகியோர் அதிரடி காட்ட 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி போட்டியை வென்றது மும்பை அணி.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
வாழ்வா சாவா போட்டி என்பதால் அதிரடியாக களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி அணி ஆரம்பத்திலேயே சொதப்பியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது டெல்லி அணி.
அதனை அடுத்து சேஸிங் களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பத்திலேயே சரிந்த ரோஹித் ஷர்மாவின் விக்கெட் அதிர்ச்சியை தந்தது. ஆனால், நிதானமாக ஆடிய இஷான் கிஷன், ப்ரெவிஸ் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். திலக் வெர்மா, டிம் டேவிட் ஆகியோர் அதிரடி காட்ட 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி போட்டியை வென்றது மும்பை அணி. 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது மும்பை அணி. இந்த போட்டியில் மும்பை வெற்றி பெற்றதன் மூலம், பெங்களூருவின் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகி உள்ளது.
.@mipaltan win 🤝 @RCBTweets reach the Playoffs! 👍 👍 #MIvDC @faf1307 & Co. join @gujarat_titans, @rajasthanroyals & @LucknowIPL in the Top 4⃣ of the #TATAIPL 2022. 👏 👏
— IndianPremierLeague (@IPL) May 21, 2022
Scorecard ▶️ https://t.co/sN8zo9RIV4 pic.twitter.com/KqxCb0iJYS
ப்ளே ஆஃப்புக்கு முன்னேறி இருக்கும் அணிகள் விவரம்:
பட்டியல் இடம் | அணிகள் | புள்ளிகள் |
1 | குஜராத் டைட்டன்ஸ் | 20 |
2 | ராஜஸ்தான் ராயல்ஸ் | 18 |
3 | லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் | 18 |
4 | ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு | 16 |
ப்ளே ஆஃப் சுற்று அட்டவணை:
மே 24: குவாலிஃபையர் 1: குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
மே 25: எலிமினேட்டர்: லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் vs ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
மே 27: குவாலிஃபையர் 2
மே 29: இறுதிப்போட்டி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்