Moeen Ali: வாங்கண்ணா வணக்கங்கண்ணா.. சென்னை அணியுடன் இணைந்த மொயின் அலி...!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மொயின் அலி தற்போது சென்னை அணியுடன் இணைந்துள்ளார்.

ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கியுள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் தோனி தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்களில் சற்று சொதப்பினர். இதனால் இரண்டாவது போட்டிக்கு முன்பாக சென்னை அணி பேட்டிங்கை சரி செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை அணியின் வீரர் மொயின் அலி தனிமைப்படுத்தலை முடித்து கொண்டு தற்போது வெளியே வந்துள்ளார். அவர் சென்னை அணியின் வீரர்களுடன் இணையும் வீடியோவை சிஎஸ்கே தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.
அதில் மொயின் அலி தோனி, ஜடேஜா உள்ளிட்ட சென்னை வீரர்கள் மற்றும் உதவி பணியாளர்களுடன் கை குலுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
Vanganna Vanakkangana! 🙏🏻
— Chennai Super Kings (@ChennaiIPL) March 28, 2022
A Superfam welcome to Namma Mo Bhai! 🦁💛#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/Y9L5tqES7r
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை சந்திக்க உள்ளது. இந்தப் போட்டியில் மொயின் அலி பங்கேற்பார். முன்னதாக அவர் இந்தியாவிற்கு வர விசா கிடைக்க தாமதமானது. இதன்காரணமாக அவர் வியாழக்கிழமை நள்ளிரவு இந்தியாவிற்கு வந்தார். அதைத் தொடர்ந்து அவர் மூன்று நாள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடிந்து சென்னை அணியின் பயோ பபுளில் இணைந்துள்ளார். இவர் மிகவும் தாமதமாக வந்ததால் சென்னை அணியின் முதல் போட்டியில் இவர் இடம்பெறவில்லை. இவர் அணியில் இடம்பெறாதது சென்னை அணியின் பேட்டிங்கிற்கு சற்று பலம் குறைந்ததாக கருதப்பட்டது. ஆகவே இரண்டாவது போட்டியில் மொயின் அலி அணிக்கு திரும்பும் பட்சத்தில் சென்னை அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு கூடுதல் பலமாகும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

