LSG vs RR : ஸ்டோய்னிஸ் போராட்டம் வீண்..! 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்..!
RR vs LSG : லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. ஹெட்மயரின் அதிரடியால் அந்த அணி லக்னோ அணிக்கு 166 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளித்தது. கேப்டன் கே.எல்.ராகுல் முதல் பந்திலே போல்டாகினார்.
அடுத்து வந்த கிருஷ்ணப்ப கவுதமும் இரண்டாவது பந்திலே எல்.பி.டபுள்யூ ஆகினார். இதையடுத்து, களமிறங்கிய ஹோல்டரும் 8 ரன்களில் ஆட்டமிழக்க தீபக்ஹூடாவும், டி காக்கும் பொறுப்பாக ஆடினர். அணியின் ஸ்கோர் 52 ரன்களை எட்டியபோது தீபக்ஹூடா 24 பந்தில் 3 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவருக்கு அடுத்து களமிறங்கிய இளம் வீரர் ஆயுஷ்பதோனி 5 ரன்களில் அவுட்டாக, குருணல் பாண்ட்யாவுடன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஜோடி சேர்ந்தார்.
குருணல் பாண்ட்யா 15 பந்தில் 22 ரன்களில் ஆட்டமிழக்க, துஷ்மந்தா சமீராவும் 13 ரன்களில் அவுட்டானர். ராஜஸ்தான் அணியின் பக்கம் வெற்றி வாய்ப்பு இருந்த சூழலில் ஆவேஷ்கான் தான் சந்தித்த முதல் பந்திலே சிக்ஸர் அடித்து விளாசினார். கடைசி இரு ஓவர்களில் 34 ரன்கள் லக்னோ வெற்றிக்கு தேவைப்பட்டது. அந்த ஓவரில் ஸ்டோய்னிஸ் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார். இதனால், லக்னோ வெற்றிக்கு கடைசி 6 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது.
இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரை குல்தீப் சென் வீசினார். முதல் பந்தை ஆவேஷ்கான் சிங்கிள் தட்டிவிட்டார். இரண்டாவது பந்து டாட் பால் ஆகியது. மூன்றாவது பந்தும் டாட் பாலாக குல்தீப்சென் வீசினார். இதனால், 3 பந்தில் 14 ரன்கள் என்ற சூழல் ஏற்பட்டது. 4வது பந்திலும் ஸ்டோய்னிஸ் ரன் எடுக்காததால் 2 பந்தில் 14 ரன்கள் என்ற சூழல் ஏற்பட்டது. 5வது பந்து பவுண்டரிக்கு சென்றது. கடைசி பந்து சிக்ஸருக்கு சென்றது. ஆனாலும், ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டோய்னிஸ் 16 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 32 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்