IPL 2022 : வந்தாரு.. அடிச்சாரு.. போனாரு.. உத்தப்பா பேட்டிங் வேகமா? சோகமா? நிரப்பப்படாத ரெய்னா இடம்?!
கடந்த 14 வது சீசன் கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் ராபின் உத்தப்பா 15 பந்தில் 3 சிக்ஸருடன் 34 ரன்கள் அடித்து சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
ஐபிஎல் 15 சீசன் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று நேருக்கு நேர் மோதி வருகின்றனர். கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும், சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவும் களமிறங்குகின்றனர். இதையடுத்து, இரண்டு புதிய கேப்டன்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று இரு அணிகளில் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டேவன் கான்வே மற்றும் ருத்ராஜ் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். கடந்த சீசனில் 600 ரன்களுக்கு மேல் அடித்து ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றிய ருதுராஜ், உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரில் ரன் எதுவும் அடிக்காமல் நடையைக்கட்டினார். தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான கான்வே 3 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து, கடந்த 14 வது சீசன் கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் ராபின் உத்தப்பா 15 பந்தில் 3 சிக்ஸருடன் 34 ரன்கள் அடித்து சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
Two strikes in quick succession! #KKR are on a roll here at the Wankhede Stadium. #CSK 4 down as Robin Uthappa and Ambati Rayudu depart.
— IndianPremierLeague (@IPL) March 26, 2022
Follow the match ▶️ https://t.co/brmob93z6Y #TATAIPL #CSKvKKR pic.twitter.com/b81ppow7Cb
அன்றைய போட்டியை போலவே இன்றும் ராபின் உத்தப்பா அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 21 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்த சூழலில் சென்னை அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ரெய்னாவிற்கு மாற்று வீரராக உத்தப்பா சரியான வீரரா..? என்று கேள்வி வருகின்றனர்.
Somehow...
— ❄️ராம்🕶️JD🔥 (@Ramkumar1063) March 26, 2022
Bring Back #Raina to CSK...
That's the Tweet... pic.twitter.com/GrR5JeJZMO
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்