IPL 2022 : அடிக்க முயன்ற பந்து... அவுட்டானார் நொந்து... பௌண்டரி லைனை தட்டி வெறுப்பை கக்கிய இஷான்!
தொடக்கத்தில் பேட்டிங் இறங்கிய ரோஹித் ஏமாற்ற, இஷான் கிஷனும் 13 ரன்களில் அவுட்டானார். அதன் தொடர்ச்சியாக பின்னால் வந்த வீரர்கள் சொதப்ப, லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 26வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.
இந்த போட்டியில் ராகுல், டி காக் ஓப்பனிங் களமிறங்கினர். 24 ரன்கள் எடுத்திருந்தபோது டி காக் அவுட்டாக, ராகுல் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். பாண்டே 38 ரன்கள் எடுக்க, ஸ்டாய்னிஸ் 10 ரன்கள் எடுக்க, தீபக் ஹூடா 15 ரன்கள் எடுக்க, ராகுல் மட்டும் அதிரடியை தொடர்ந்தார்.
9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 60 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக சதம் கடந்து ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார் ராகுல். இதில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அடித்த இரண்டு சதம் அடங்கும். ராகுலின் ஒன் மேன் ஷோவால், மும்பை அணி வெற்றி பெற 200 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
12(21)
— A l V Y (@9seventy3) April 16, 2022
26(28)
6(17)
11(10)
14(13)
9(12)
4(9)
4(8)
35(42)
2(10)
34(31)
15(16)
54(43)
14(21)
26(29)
3(6)
13(17)
Ishan Kishan played all these masterclass in T20 cricket in past 1 years only.
200 ரன்கள் எடுத்தால் என்ற கடின இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். வழக்கம்போல், ரோஹித் ஏமாற்ற, இஷான் கிஷனும் 13 ரன்களில் அவுட்டானார். அதன் தொடர்ச்சியாக பின்னால் வந்த வீரர்கள் சொதப்ப, லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரியில் நடந்த மெகா ஏலத்தில் மும்பை அணியால் 15.25 கோடி ரூபாய்க்கு இஷான் கிஷன் எடுக்கப்பட்டார். ஆனால், இந்த சீசன் அவருக்கு பெரிதாக அமையவில்லை. அதேபோல், இன்று நடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் 13 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து, இஷான் கிஷன் அவுட்டாகி வெளியே சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
— Diving Slip (@SlipDiving) April 16, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்