![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPL 2022 Final: ஐபிஎல் நிறைவு விழாவில் கின்னஸ் உலக சாதனை... ரசிகர்களை மகிழ்வித்த கலை நிகழ்ச்சிகள் !
ஐபிஎல் தொடரின் நிறைவு விழாவில் கின்னஸ் உலக சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.
![IPL 2022 Final: ஐபிஎல் நிறைவு விழாவில் கின்னஸ் உலக சாதனை... ரசிகர்களை மகிழ்வித்த கலை நிகழ்ச்சிகள் ! IPL 2022 Final GT vs RR Worlds Largest Jersey at Largest Cricket Stadium Narendra Modi Stadium Guinness World Record IPL 2022 Final: ஐபிஎல் நிறைவு விழாவில் கின்னஸ் உலக சாதனை... ரசிகர்களை மகிழ்வித்த கலை நிகழ்ச்சிகள் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/a3fab12352b37d1d7031b42ac9eaf24f_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் தொடர் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. இன்று அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்கியுள்ள குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேபோல் முதல் ஐபிஎல் தொடருக்கு பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன்காரணமாக இந்த இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கு முன்பாக நடைபெற்ற ஐபிஎல் நிறைவு விழாவில் ஒரு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. அதாவது உலகிலேயே மிகவும் பெரிய கிரிக்கெட் ஜெர்ஸி ஆடுகளத்தில் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் ஒரு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் பெரிய மைதானமான அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் இந்த கின்னஸ் சாதனை அரங்கேறியுள்ளது.
A 𝗚𝘂𝗶𝗻𝗻𝗲𝘀𝘀 𝗪𝗼𝗿𝗹𝗱 𝗥𝗲𝗰𝗼𝗿𝗱 to start #TATAIPL 2022 Final Proceedings. 🔝 #GTvRR
— IndianPremierLeague (@IPL) May 29, 2022
Presenting the 𝗪𝗼𝗿𝗹𝗱'𝘀 𝗟𝗮𝗿𝗴𝗲𝘀𝘁 𝗖𝗿𝗶𝗰𝗸𝗲𝘁 𝗝𝗲𝗿𝘀𝗲𝘆 At The 𝗪𝗼𝗿𝗹𝗱'𝘀 𝗟𝗮𝗿𝗴𝗲𝘀𝘁 𝗖𝗿𝗶𝗰𝗸𝗲𝘁 𝗦𝘁𝗮𝗱𝗶𝘂𝗺 - the Narendra Modi Stadium. @GCAMotera 👏 pic.twitter.com/yPd0FgK4gN
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் 83 திரைப்பட பாடலுடன் தன்னுடைய நடனத்தை தொடங்கினார். அதன்பின்னர் அவர் மாஸ்டர் திரைப்பட்டத்தின் பாடல் மற்றும் கே.ஜிஎஃப் திரைப்படத்தின் பாடல் உள்ளிட்டவற்றிற்கு நடனமாடினார். அதைத் தொடர்ந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இசை நிகழ்ச்சியை நடத்தினார். அவரும் சில தமிழ் பாடல்களை பாடி அசத்தினார்.
Jai Ho! 👏 👏@arrahman & Co. are joined by @RanveerOfficial on stage! 👍 👍#TATAIPL | #GTvRR pic.twitter.com/GkOKOIiggG
— IndianPremierLeague (@IPL) May 29, 2022
அதன்பின்னர் இந்திய கிரிக்கெட் அணி தொடர்பான ஒரு சிறப்பு நிகழ்ச்சி இருந்தது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் நிறைவு விழா முடிவிற்கு வந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)